டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - Yarl Voice டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - Yarl Voice

டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்களை யாழ் மாநகர சபையுடன் இணைந்து இன்று ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்துள்ளனர்.

இச் செயற் திட்டத்திற்கமைய டெங்கு நுளம்பு பெரும் வகையில் காணப்படுகின்ற குப்பைகளை அகற்றுவதுடன் வீதிகள் பொது இடங்கள் என துப்பரவுப் பணிகளையும் மேற்கொள்வதுடன் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்கின்றனர்.

யுhழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு நோயைக் கட்டப்படுத்தி இல்லாதொழிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் சில தினங்களிற்கு முன்னர் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் டெங்கு நோயயைக் கட்டப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பதுடன் .பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்க வேண்டுமென்றும் தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருந்தது.

இதற்மையவே அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்திருக்கின்றனர். இதில் மாநகர சபையின் 17இ 20இ 15 ஆம் வட்டராங்களான அரியாலை ஈச்சமோட்டைஇ யாழ் நகர் பகுதி என மூன்று வட்டாரங்களில் இந்த செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது வீதிகள் பொது இடங்களில் துப்பரவு பணிகளை மேற்கொண்டதுடன் குப்பைபகளையும் அகற்றியிரந்தனர். அத்தோடு டெங்கு தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகித்தனர்.

இந்த டெங்கு ஒழிப்பு செய்திட்டத்தில் அக் கட்சியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கட்சியின் தீர்மானத்திற்கமைய இன்றையதினம் மூன்று வட்டாரங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற டெங்கு ஒழிப்புச் செயற்திட்டங்கள் தொடர்ந்து ஏனைய வட்டாரங்களிலும் இடம்பெறவுள்ளதாகவும் அதே போல ஏனைய உள்ளுராட்சி மன்றங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post