பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக யாழ் வருகிறார் புதிய பாதுகாப்பு செயலாளர் - Yarl Voice பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக யாழ் வருகிறார் புதிய பாதுகாப்பு செயலாளர் - Yarl Voice

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக யாழ் வருகிறார் புதிய பாதுகாப்பு செயலாளர்


பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு விஜயம் செய்யவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முப்படைகளின் அதிகாரிகள்இ பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் வடக்கிற்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post