சைவத் தமிழ் மக்களுக்கே இலங்கை உரியது என தமிழ் மக்கள் கூடு;டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சரமான சீ.வீ.விக்கினெஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'இலங்கை சிங்கள தேசம்' என்ற கருத்து தென்பகுதியில் வலுப்பெற்றுவருகின்றது. அப்படியாயின் தமிழரின் இடம் என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
இது பற்றி நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் பதில் அளித்துவிட்டேன். அதைத் தமிழிலும் மொழிபெயர்த்து சில பத்திரிகைகள் பிரசுரித்துள்ளன. சுருங்கக் கூறுவதெனில் இலங்கை சைவத் தமிழ் மக்களுக்கே உரியது.
புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே சைவத் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்துள்ளார்கள். முதலில் பௌத்தத்திற்கு மாறியவர்களும் அவர்களே. சிங்களமொழி அப்போது பிறந்திருக்கவில்லை. கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில்த் தான் சிங்களம் என்பது ஒரு மொழியாகப் பரிணமித்தது.
ஆகவே அந்த மொழி வருவதற்கு முன் இலங்கையில் சிங்களவர் இருக்கவில்லை. சுமார் 1300 அல்லது 1400 வருடங்களாகத்தான் சிங்களம் ஒரு மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அதற்குமுன் தமிழ் மொழியுடன் பாளிமொழி இருந்தது.
துஷ்டகாமினி ஒரு பௌத்த தமிழன். எல்லாளன் ஒரு சைவத் தமிழன். அந்தக் காலத்தில் சிங்களமொழி இருக்கவில்லை. ஆகவே துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
Post a Comment