தொடர் மழையால் யாழில் இடிந்து விழுந்த பழமை வாய்ந்த மடம்
யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் கோவிலுக்கு முன்பாக இருந்த பழமை வாய்ந்த மடம் நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது.
நேற்று இரவு பெய்த அடைமழையின் காரணமாகவே குறித்த மடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
குறித்த மடமானது பல வருடங்களுக்கு முன்னர் கோவிலுக்கு வருபவர்கள் அப்பகுதியில் உள்ளவர்கள் வீதியால் சென்று வருபவர்கள் ஆகியோர் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த மடத்தை கோவில் நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்திருந்த போதும் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் அம்மடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த மடத்தை மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்போவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment