மணற்கொள்ளைக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம் - கட்சிவேறுபாடுகள் கடந்து அணி திரள அழைப்பு - Yarl Voice மணற்கொள்ளைக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம் - கட்சிவேறுபாடுகள் கடந்து அணி திரள அழைப்பு - Yarl Voice

மணற்கொள்ளைக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம் - கட்சிவேறுபாடுகள் கடந்து அணி திரள அழைப்பு


வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னபாக நாளை மறுதினம் புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.

அதே போன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.

 இதற்கமைய நாளை மறுதினம் யாழ் மத்திய பேருந்த நிலையத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி வேறுபாடகளைக் கடந்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post