பூகோள போட்டியினால் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படும், தேசக் கோட்பாட்டை நோக்கி மக்கள் அணிதிரள வேண்டும் - கஜேந்திரன் - Yarl Voice பூகோள போட்டியினால் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படும், தேசக் கோட்பாட்டை நோக்கி மக்கள் அணிதிரள வேண்டும் - கஜேந்திரன் - Yarl Voice

பூகோள போட்டியினால் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படும், தேசக் கோட்பாட்டை நோக்கி மக்கள் அணிதிரள வேண்டும் - கஜேந்திரன்


இலங்கைத் தீவை மைப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றது. இதனை நாங்கள் கடந்த பல வருடங்களாகச் சொல்லி வந்த போது தமிழ் தரப்புக்களே இது நடைமுறைச்சாத்தியமற்றது என்று எங்களை கேலி செய்து வந்த போதிலும் நாங்கள் அன்று சொன்ன இந்த விடயங்கள் இன்று யதார்த்தமாகி வருகிறது.

எனவே இதனை எமது மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு அந்தப் கோட்பாட்டை நோக்கி அணி திரண்டால் நீண்டகால அடிமைத்தனத்திற்குள் இருந்து விடுபடுகின்ற நிலைமைக்குள் நாங்கள் பிரவேசிக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஐப்பான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஐனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் உரையாடிய விடயங்களில் மிக முக்கியமான விடயங்கள் ஊடகங்களில் வெளி வந்திருக்கின்றது. அதாவது சீனாவின் கொங்கொங்கைப் போல ஒரு நாடு இருதேசம் என்ற கோட்பாட்டை இலங்கையிலும் உருவாக்குவதற்கு வல்லரசு நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஐனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார்.

ஆசீனா நாட்டின் ஆளுகைக்குட்பட்டிருக்கின்ற கொங்கொங் பிராந்தியத்திலே குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது எல்லொருக்கும் தெரிந்த விடயம். இந்தச் சந்தர்ப்பத்திலே தான் ஐப்பான் நாட்டினுடைய வெளிவிவகார அமைச்சரசைச் சந்தித்த போது அவ்வாறாக இரு தேசங்கள் ஒரு நாடு எனபதை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஐனாதிபதி கூறியிருக்கின்றார்.

ஆகவே ஐனாதிபதியின் இந்தக் கருத்து என்னத்தை வெளிப்படுத்துகிறதென்றால் இலங்கைத் தீவை மையப்படுத்தி வல்லரசு நாடுகளுக்கிடையே ஒரு ராஐ போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அந்தப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதென்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்தப் போட்டிச் சூழலிலே இலங்கைத் தீவை தங்களுடைய ஆளுகைக்குள் வைத்தக் கொள்ள விரும்புகின்ற இந்த வல்லரசுகளின் ஒருபகுதியினர் அதாவது இலங்கை ஆட்சியாளர்கள் தற்பொது நடந்து கொள்கின்ற விதத்தை விரும்பாத சர்வதேச வல்லரசுகள் இலங்கையில் தமிழர்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்கக் கூடிய சூழல் அதிகரித்து வருவதை ஐனாதிபதியினுஐடய இந்த உரையாடல் தெளிவுபடுத்திக் காட்டகின்றது.

ஏனென்றால் இலங்கையின் ஆட்சியாளர்களின் தற்பொதை போக்கு என்பது இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்ற ஒரு சாராருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றதென்பது எல்லொருக்கும் நன்றாகத் தெரியும். அவ்வாறான ஒரு சூழலிலே இந்தத் தீவை கையாள்வதற்காக இலங்கையில் இருக்கக் கூடிய வடக்கு கிழக்கு பிராந்தியத்தை தாயகமாக கொண்டு வாழ்கின்ற தமிழர்கள் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள். ஆகவே தேசத்தை அங்கீகரத்து விடக்கூடியதாக நிலைமை நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தான் காட்டுகின்றது.

ஆகையினால் இந்த இடத்தில் ஐனாதிபதியின் கருத்துப் பிரகாரம் அவர் என்னத்திற்கு முயற்சி செய்கின்றார் என்று சொல்லிச் சொன்னால் இலங்கையின் நீண்டகால நட்பு நாடான கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இலங்கையின்  நட:பு நாடாக இருக்கக் கூடிய ஐப்பானிடம் இந்த வல்லரசுகள்  இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற நிலைமையை நோக்கி செல்லக் கூடாது, செல்ல விடக் கூடாது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையிலையே உதவியைக் கோருவது போன்றே இது அமைந்திருக்கிறது.

இரு நாடகளுக்குமு; இடையில் இருக்கின்ற நீணட்ட உறவைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் தேசத்தை உருவாக்குகின்ற செயற்பாடுகளை வல்லரசுகள் முன்னெடுக்கக் கூடாது என்று ஐப்பானிடம் கேட்கின்றார். குறிப்பாக சீனாவில் கொங்கொங் போன்று தேசத்தை அங்கீகரிக்கின்ற நிலைமையை உருவாக விடக் கூடாது என்று கேட்டிருக்கின்றார்.

ஆகவே இலங்கைத் தீவை மையப்படுத்தி வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் பொட்டி நாளும் பொழுதும் வலுவடைந்து கொண்டு செல்கின்றன. அது வளர்ந்து கொண்டு செல்கின்றது. தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கிறது என்கின்ற அந்த உண்மையை எங்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த பத்து வருடங்களாக இலங்கைத் தீவை மையப்படுத்தி ஒரு பூகோளப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தமிழ்த் தரப்பை பயன்படுத்த வேண்டிய தேவை ஒரு வல்லரசு தரப்பிற்கு இருக்கிறது என்பதை எங்கள் கட்சியின் தலைவர் கNஐந்திரகுமார் தலைமையில் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திரக்கிறோம்.

கடந்த 2010, 2015 ஆம் ஆண்டிலும் எங்களுடைய பிரதான கோசம் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் துரதிஸ்ரவசமாக வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல்களில் போட்டியிட்ட ஏனைய தரப்புக்கள் நாங்கள் சொல்கின்ற கருத்துக்கள் பொய்யானவை என்றும் அவை ஒரு கேலிக்குரியவை என்றும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்றும் எங்களைக் கேலி செய்த கிண்டல் செய்து மக்களையும் தவறாக வழிநடத்திக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஆனால் இன்று இந்த தீவில் நடைபெறுகின்ற சம்பவங்களை வைத்துக் கொண்டு பார்க்கின்ற பொழுது நாங்கள் சொல்லி வந்த விடயங்கள் தான் யதார்த்தமாகி வருகிறது. தேசம் அங்கீகரிக்கக் கூடிய நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை எங்களுடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறதென்பதை நன்றாகப் புரிந்து கொண்டு எதிர்காலத்திலே தங்களுடைய தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இது சாத்தியமில்லை என்றும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 13 ஆம் திருத்தத்திற்குள் நாங்கள் தீர்வை அடைந்து கொள்ள வேண்டுமென்றும் சொன்னவர்கள் எல்லோரும் எந்த நோக்கத்திற்காக இதனைச் சொல்லி வந்தார்கள் என்பதனையும் எங்களுடைய மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டோடு அதாவது இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற என்ற நிலைப்பாட்டோடு பயணிக்கின்ற கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான எங்களுடைய அணியை மக்கள் பலப்படுத்துவார்களாக இருந்தால் இந்தத் தீவை மையப்படுத்தி அதிகரித்திருக்கின்ற இந்தப் பூகோளப் போட்டியில் தமிழ் மக்களுக்கான அந்த வாய்ப்பை சாதகமாக்கிக் கொள்ளக் கூடிய நிலைமைகள் இருக்கிறதென்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

கோங்கொங்கைப் பொறுத்தவரையில் ஒரு அரசிற்குள் இரண்டு கட்டமைப்புக்கள் என்று இருக்கிறது. ஆகவே நாங்களும் இல்லாத ஒன்றை இங்கு கேட்கவில்லை. நாங்கள் ஒரு தேசம். அது வரலாற்று ரீதியாக நிருபிக்கப்பட்டிருக்கின்ற ஒரு விசயம். ஆனால் நாங்கள் அந்தத் தேசத்தை சிங்களத்திடம் இழந்திருக்கிறோம். ஆகவே இழந்திருக்கின்ற அந்த அதிகாரத்தை தான் நாங்கள் கேட்கிறோமே தவிர இல்லாத ஒன்றை நாங்கள் புதிதாகக் கேட்கவில்லை.

இதனை நாங்கள் அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது என்பதனை எங்களுடைய மக்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நினைவுபடுத்த விரும்புகிறோம்.

ஆகையினால் இலங்கைத் தீவை மையப்படுத்தி இடம்பெறுகின்ற வல்லரசுகளுக்கு இடையிலான பூகோள ஆதிக்கப் போட்டி உச்சமடைந்த கொண்டு செல்கின்றது. இந்தப் போட்டியானது தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்ட செல்கிறது.  இதனை எங்கள் மக்கள் விளங்கிக் கொண்டு தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கோட்பாடுகளை நோக்கி அணிதிரளுகின்ற பட்சத்திலெ நாங்கள் அதனைச் சாத்தியமாக்கி முன்னோக்கிப் போலாம் என்பது எங்களுடைய கருத்து.

இதனை மக்கள் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் இதனைத் தடுப்பதற்கு இலங்கை அதிபர் தனது நட்பு நாட்டிடம் உதவி கோரியிருக்கின்றார் என்று சொல்லிச் சொன்னால் இதைப் புரிந்து கொண்டு செயற்படுவார்களாக இருந்தால் நீண்டகால அடிமைத்தனத்திற்குள் இருந்து விடுபடுகின்ற நிலைமைக்குள் நாங்கள் பிரவேசிக்கலாம் என்பதை இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
;

0/Post a Comment/Comments

Previous Post Next Post