பயங்கரவாத குற்றத்தடுத் தடுப்பு பிரிவினரின் விசாரணைகளுக்கு என்று கொழும்பு சென்ற தனது கணவனைக் காணவில்லை. என வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
கெருடாவில் தெற்கைச் சேர்ந்த பரமு விஐயகுமார் என்ற குடும்பஸ்தரே ரீ.ஐ.டி விசாரணைக்கு கடந்த 6 ஆம் திகதி சென்று காணாமல் போயுள்ளதாக இன்று மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து கொழும:பு குற்றத்துடுப்பு பிரிவினருடன் வல்வெட்வெட்டித்துறைப் பொலிசார் தொடர்பு கொண்டு இச் சம்பவம் தொடர்பில் விசாரித்தனர். ஆயினுமு குறித்த நபர் அங்கு விசாரணைகளுக்குச் செல்லவில்லை என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment