கலைப்பிரிவில் சாதித்த கொக்குவில் இந்து மாணவன்
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் கெங்காவரதன் நிலக்ஸ்ஷன் கலைப் பிரிவில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
2019 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றிய கெங்காவரதன் நிலக்ஸ்ஷன் தமிழில் 'பி' சித்தியையும் ஐரோப்பிய வரலாறு நாடகமும் அரங்கியல் ஆகிய இரு பாடங்களில் ஏ சித்தியைப் பெற்றுள்ளார்.
2.1820 இசட் புள்ளிகளைப் பெற்றுள்ள கே.நிலக்ஸ்ஷன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது நிலையையும் தேசிய மட்டத்தில் 2ஆவது நிலையையும் பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு
பெருமை சேர்த்துள்ளார் என்று பாடசாலைச் சமூகம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
Post a Comment