வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச சபை குப்பைகளை அகற்றாததால் பிரதேச சபையின் உறுப்பினர் தாமாக இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள இந்த பிரதேச சபையில் சபையின் எதிர்க் கட்சிகளாக இருக்கின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இணைந்தே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது..
வலிகாமம் தெற்கு பிரதேச சபையான சுன்னாகம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தன. இது தொடர்பில் பொது மக்களும் அந்த மக்களின் பிரதிநிதிகளும் சபைக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.
ஆனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அந்தப் பகுதி மக்களும் இணைந்து தாமாக உழவு இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி குப்பைகளை அகற்றியுள்ளனர்.
இவ்வாறு அகற்றப்பட்ட குப்பைபகைள பிரதேச சபையின் முன்பாக கொண்டு வந்து பிரதேச சபைக்கு எதிராக கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச சபை தவிசாளர் கு.தர்சன் சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன் போது உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர் மற்றும் நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். ஆயினும் இந்தக் குற்றச்சபாட்டுக்களை பிரதேச சபைத் தவிசாளர் மறுத்திருந்தார்.
அத்தோடு அரசியல் இலாபங்களுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்க மேவண்டாமென்றும் தவிசாரளர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment