பத்து வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தானில் சாதனை படைந்த இலங்கை வீரர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக 308 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமான இப்போட்டியில்இ நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
தொடர்ச்சியாக மழை குறுக்கிட்டமை காரணமாக மூன்றாம் நாள் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அதேபோன்று நேற்றைய நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததால்இ ஒரு பந்துக் கூட வீசாத நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று முதல் இன்னிங்ஸ்காக ஆறு விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியுள்ளது.
சிறப்பாக விளையாடிய தனஞ்சய டி சில்வா சதத்தினை பதவு செய்திருந்தார்.
கடந்த 2009ஆம் இலங்கை அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற முதல் டெஸ்ட் தொடராக இந்த தொடர் காணப்படுகின்றது.
இந்தநிலையில் 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சதம் விளாசிய வீரராக தனஞ்சய டி சில்வா வரலாற்றில் தனது பெயரினை பதிவு செய்துள்ளார்.
Post a Comment