சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயற்படுகிறதாக வைகோ குற்றச்சாட்டு - Yarl Voice சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயற்படுகிறதாக வைகோ குற்றச்சாட்டு - Yarl Voice

சமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயற்படுகிறதாக வைகோ குற்றச்சாட்டு


தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.   மருத்துவ கல்லூரிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 69 சதவீதத்தை இழந்துள்ளதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன்  தமிழக அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி வகுக்காமல்  தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் வஞ்சகம் செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்இ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் 'எத்தகைய ஒரு பாசிச போக்கு இருக்கிறது  நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது என்கிறபோது இந்த அரசுக்கு நிர்வாகத்திலே சிறப்பிடம் கொடுத்திருப்பதாக  அரசு சொல்வது தமிழகத்தில் மக்களை ஏமாற்றுவதற்காகவே ஆகும்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகச் சீர்கேடு இங்கு இருக்கும்போது இந்த அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து ம.தி.மு.கவும் வழக்கு தொடர்ந்து உள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் சிசிடிவி  கமெராக்கள் மூலமாகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post