தமிழ் மக்களின் விடயங்களில் திணறுகிறார் கோத்தபாய - கூட்டமைப்பு குற்றச்சாட்டு - Yarl Voice தமிழ் மக்களின் விடயங்களில் திணறுகிறார் கோத்தபாய - கூட்டமைப்பு குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழ் மக்களின் விடயங்களில் திணறுகிறார் கோத்தபாய - கூட்டமைப்பு குற்றச்சாட்டு



வடக்கு ஆளுநர் நியமனம் உட்பட தமிழ் மக்களின் பல விடயங்களிலும் ஐயாதிபதி கோத்தபாய திணறிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தனது அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு ஆளுநர் விடயம் குறித்து எழுப்பப்ட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

புதிய ஐனாதிபதி பதவியேற்ற பின்னர் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து வந்தார். ஆனால் வடக்கிற்கு இதுவரையில் ஆளுநரை நியமிக்கவில்லை. குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு ஆளுநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிற புது ஐனாதிபதியைத் தான் நாங்கள் இப்பொழுது பார்க்கிறோம்.

வுடக்கு ஆளுநர் விடயம் உட்பட தமிழ் மக்களின் பல விடயங்கள் சம்மந்தமாக அவர் திணறிக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆகவே அவர் தனக்குரிய ஒருவரைப் பார்த்து முதலிலே ஆளுநராக நியமிக்கட்டும்.
ஏனெனில் எங்களுடைய நிர்வாகங்கள் நடைபெறாமல் பல விடயங்கள் முன்னேற முடியாத சூழ்நிலை இருக்கிறது.

ஆகையினாலே ஆளுநர் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒன்று. அது யாராக இருந்தாலும் ஐனாதிபதி முதலிலே ஆளுநரை நியமிக்க வேண்டும். அதற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய கருத்துக்களைச் சொல்லுவோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post