பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பங்களாதேஷ் அணியின் நிலைப்பாடு - Yarl Voice பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பங்களாதேஷ் அணியின் நிலைப்பாடு - Yarl Voice

பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பங்களாதேஷ் அணியின் நிலைப்பாடு


பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிஇ தற்போது பொதுவான இடத்தில் டெஸ்ட் தொடரை நடத்தினால் விளையாட தயார் என தெரிவித்துள்ளது.

எனினும் பாகிஸ்தான் மண்ணில் ரி-20 தொடரில் விளையாடுவதற்கு தயார் என பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சௌதரி கூறுகையில்இ 'பொதுவான இடமாக இருந்தால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாடத் தயார். எங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ரி-20 தொடரில் மட்டுமே பாகிஸ்தான் விளையாடுவோம்' என கூறினார்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஷான் மணி கூறுகையில்

'சொந்த மண்ணில் திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் தொடரை இங்குதான் விளையாடுவோம். பங்களாதேஷ் ஏன் எங்கள் நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாட மறுக்கிறது என்று விளக்கம் அளிக்க வேண்டும்' என கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் பாகிஸ்தான் சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

இதன்பலனாகஇ 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து கிரிக்கெட் தொடரிலும் விளையாடிஇ வீரர்களுக்கு பணப்பரிசினையும் பரிசளித்தது.

இதன்பிறகுஇ 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.

இவ்வாறான கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்ட போதும்இ பாகிஸ்தான் மீது நம்பிக்கையில்லாத சர்வதேச அணிகள் அங்கு சென்று விளையாட தொடர்ந்தும் தயக்கம் காட்டின.

ஆனால் உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் சென்று இலங்கை அணி அச்சப் போக்கினை துடைத்தது.

நீண்டதொரு சர்ச்சைக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடரில் விளையாடியது. இதில் இலங்கை அணியின் பல முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் பல முன்னணி வீரர்களுடன்இ 10 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணிற்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற இத்தொடரை 1-0 என பாகிஸ்தான் வென்றது.

இவ்வாறு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடியதால் மற்ற அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை நம்பிக்கையுடன் இருந்தது.

இதற்கு காரணம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதும் ஒரு காரணம். இந்த சம்பியன்ஷிப்பின் படி ஒவ்வொரு அணிகளும் தங்களது நாட்டிலும் வெளிநாட்டிலும் விளையாட வேண்டும்.

இதனடிப்படையில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.

பங்களாதேஷஅணி எப்படியும் பாகிஸ்தான் வரும் என்று நம்பியிருந்தது. ஒரு போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த விரும்பிய பாகிஸ்தான்இ இதற்கு சம்மதிக்கும்படி பங்களாதேஷிற்கு வேண்டுகோளும் விடுத்தது.

ஆனால்இ பாதுகாப்பு கருதி டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என்று பங்களாதேஷ் கூறியுள்ளது. இதனால் தற்போது என்ன செய்வதறியாது பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post