தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிலைமாறுகால நீதி தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்
சமூக சிற்பிகள் நிறுவனத்தின் சோனக தெரு பிரதேச இளைஞர் குழுவின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நிலைமாறுகால நீதி தொடர்பான விசேட விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நேற்று (8) மாலை யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் குறித்த சட்டங்களை எவ்வாறு பயன்படுத்துவது? அதை பரீட்சிக்கும் பொழுது ஏற்படும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது? அதன் நன்மைகள் யாவை? என்பவற்றை கிராம மட்டம் வரை கொண்டு செல்லும் வகையில் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் சிரேஸ்ட வளவாளர்களான ரங்கன் மற்றும் .ரவீந்திரன் ஆகிய வளாவாளர்களைக் கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொதுமக்கள் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முதியோர் சங்க பிரதிநிதிகள் இளைஞர் கழக பிரதிநிதிகள் மதத்தலங்களின் நிர்வாகசபை பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் தமது சந்தேகங்களுக்கும் விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
Post a Comment