ஐனாதிபதியின் பணிப்புரைக்கமைய முப்படையினரும் களமிறக்கப்பட்டு யாழில் சோதனை - Yarl Voice ஐனாதிபதியின் பணிப்புரைக்கமைய முப்படையினரும் களமிறக்கப்பட்டு யாழில் சோதனை - Yarl Voice

ஐனாதிபதியின் பணிப்புரைக்கமைய முப்படையினரும் களமிறக்கப்பட்டு யாழில் சோதனை


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுன் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்க இன்றையதினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து அதிகாலை முதல் சோதணை நடவடிக்கை முண்ணெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பொலிஸார்இ பொலிஸ்விசேட அதிரப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்திருந்தனர்.

யாழ்மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரிய வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையினை இழந்திருந்தனர். தற்போது ஆட்சியில் இராணுவத்தினர் வீதியில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளதை அடுத்து வன்முறை சம்பவங்கள் வழிப்பறி கொள்ளைஇ மற்றும் விபத்து சம்பவங்கள் என பல்வேறு செயற்பாடுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சுத்வளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கையில் இடம்பெற்றதோடு பொது மக்களின் வீடுகளும் சோதனையிடப்பட்டது



0/Post a Comment/Comments

Previous Post Next Post