சாந்தியும் சமாதானமும் மலர வேண்டும் - நத்தார் வாழ்த்துச் செய்தியில் முதல்வர்
யாழ் மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் நத்தார் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
உலகில் மக்கள் மத்தியில் பரந்து செறிந்த தீமைகள் அகல வேண்டும் என்பதற்கு இணங்க தேவனினால் உலகின் மீட்பிற்காக பெத்தலேகேமில் இயேசுபிரான் திரு அவதாரம் பெற்ற நாளே உலகெங்கும் நத்தார் தினமாக பன்நெடுங்காலமாக கொண்டாடப்பட்டுவரும் அதி சிறந்த தினமாகும்.
இந்நாளில் மக்கள் மனதில் அமைதியும் சாந்தமும் நிலவ வேணடும். மக்கள் மத்தியில் உள்ள துன்பங்கள் துயரங்கள் தொலைந்தாக வேண்டும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் இயேசு பிரானின் உன்னதமான போதனைகளை பின்பற்றினோமேயானால் என்றென்றும் உலகில் அமைதி நிறைவு பெறும் என்பதில் ஐயமில்லை.
எனவே நத்தார் வேடிக்கைக்கும் விநோகங்கட்கும் உரிய நாளன்று அந்நாள் ஒரு பொன் நாள் எனக் கருத்திற் கொண்டு நாம் 'எம்மைப்போல் பிறரை நேசித்து இயேசு பிரானின் போதனைகளை இந்த நத்தார் திருநாளில் இருந்து திடசங்கற்பம் பூண்டு வாழ முற்பட்டால் எம்மைப் பீடித்திருக்கும் துன்பங்கள்இ துயரங்கள் தானாகவே விட்டகலும் என்பதில் ஐயமில்லை. இதுவே இன்று எமக்கு வேண்டிய வாழ்க்கை முறையாகும்.
உலகத் திருநாளாகிய இந்நாளில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டி தேவனின் திருக்குமாரனைப் பணிந்து உலகில் அனைவரும் சாந்தியும் சமாதானமும் உடையோராய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Post a Comment