தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தால் நாளை அவசரமாக ஒருங்கிணைப்புக் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் புளொட் ஆகிய மூன்று கட்சிகள் தற்போது இருக்கின்றன.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளில் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கடும் அதிருப்பதியடைந்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் கூட்டமைப்பில் இருந்த வெளியேறுவது தொடர்பில் இந்த இரண்டு கட்சிகளும் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அவ்வாறு இந்த கட்சிகள் இரண்டு கூட்டமைப்பில் இருந்து வெளியெறினால் தமிழரசுக் கட்சி தனித்து விடப்படும் நிலைமை உருவாகும்.
ஆகையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனையடுத்து அவசரமாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது.
இதே வேளை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் மாற்று அணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment