பௌத்த சின்னங்கள் வைப்பது தவறு, அமைச்சர், ஆளுநருடன் பேசி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம் - மாவை சேனாதிராசா - Yarl Voice பௌத்த சின்னங்கள் வைப்பது தவறு, அமைச்சர், ஆளுநருடன் பேசி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம் - மாவை சேனாதிராசா - Yarl Voice

பௌத்த சின்னங்கள் வைப்பது தவறு, அமைச்சர், ஆளுநருடன் பேசி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம் - மாவை சேனாதிராசா


பௌத்த சின்னங்களை வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். இதற்கமைய சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யுhழ் சிறைச்சாலை வளாகத்திற்கு முன்பாக பௌத்த சின்னங்களை வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

பௌத்த சின்னங்கள் அங்கு வைக்க வேண்டிய தேவை எழமுடியாது. யாருக்கும் தெரியாமல் சிறைச்சாலை அதிகாரிகள் அப்படிச் செய்திருநதால் அது தவறானது. அதற்கு எதிர்ப்புக்கள் வருவது நியாயமானது. ஆகவே அவ்வாறான நடவடிக்கைகள் தொடரக் கூடாது. ஆகையினால் அங்கு சின்னங்கள் வைக்கின்ற முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.

சிறைச்சாலைக்குள் மட்டுமல்ல இரர்னுவ முகாம்கள் இருந்த இடங்களிலும் தற்போது முகாம்கள் இருக்கின்ற இடங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த 30 ஆண்டுகள் காலத்திலும் நடைபெற்று வந்திருக்கின்றது. அதனை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்த்தே வருகின்றோம்.

இப்பொழுது இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகும் சிறைச்சாலையில் பௌத்த சின்னங்களை நினைவு சின்னங்களாக வைக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதைவிட பௌத்த சிலைகளையும் வைப்பதற்கு முயற்சிகள் இருந்ததாகவும் ஆனால் அப்படி அது இடம் பெறவில்லை என்றும் எமக்கு தகவல் தரப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளருடனும் அந்த சிறைச்சாலைகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர்களுடனும் அதைவிட இப்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு மாகாண ஆளுநர் ஆகியொருடனும் நாங்கள் பேச இருக்கின்றோம். அதற்கமை எதிர்வரும் திங்கட்கிழமை இந்த இங்கு பௌத்த சின்னங்களை வைக்கும் முயற்சிக்கு எதிராக ஆளுநருடன் நாங்கள் பேச இருக்கின்றோம்.

அதைவிட அரச தரப்பில் இருக்கின்றவர்களுடன், சிறைச்சாலை ஆணையாளரிடமும் இது தொடர்பில் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். தேவையில்லாமல் சட்டவிரோதமாக பௌத்த சின்னங்களை வைக்கின்றதை தடுத்து நிறுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளுவோம் என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post