முன்னாள் அமைச்சர் சம்பிக்க விளக்கமறியலில் - Yarl Voice முன்னாள் அமைச்சர் சம்பிக்க விளக்கமறியலில் - Yarl Voice

முன்னாள் அமைச்சர் சம்பிக்க விளக்கமறியலில்


tகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க முற்படுத்தப்பட்டுள்ளார்.நேற்று மாலை கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தெரியவருகையில்

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை இன்று வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post