நியுசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானை தொடர்ந்து நியூசிலாந்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகஇ அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரவுல் தீவில் நள்ளிரவு 1.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 25 மைல்கள் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்த தீவின் தென் மேற்கு திசையில் சுமார் 80 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரவுல் தீவில் இரவு 1.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தகவல் எதுவும் வெளியாகவில்லை
Post a Comment