யாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்தப்பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை பதினொரு அமர்வுகளாகஇடம்பெறவுள்ளது.
கலைப்பீடம்இ விஞ்ஞான பீடம் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் விவசாய பீடம் மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச்சேர்ந்த 64 பட்ட பின்படிப்பு பட்டதாரிகளுக்கும் 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும் தகைமைச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதுடன் 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள்உறுதிப்படுத்தப்படவுமுள்ளன
Post a Comment