இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக பௌத்த சின்னங்கள் வைப்பதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெல் அனைவரையும் அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
சுபையின் அனுமதியின் சட்டவிரோதமாக முன்னெடக்கப்படுகின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநகர சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள விந்தன் தமிழ் மக்களின் நலன்சார்ந்த இந்த விடயத்தில் கட்சி பேதங்களின்றி அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலை திணைக்களத்துக்கு முன்பாக இரவோடு இரவாக பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன இது தமிழ் சிங்கள மக்களிடையே முரண்பாடு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த சிலையை வைப்பதற்கு எதிராக பொது மக்கள் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம் நமது எதிர்ப்பினை அடுத்து தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை திணைக்களம் மீண்டும் பௌத்த சின்னங்கள் வைக்க முன் வருமேயானால் அது இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் எல்லைக்குள்ளேயே யாழ்ப்பாண சிறைச்சாலை திணைக்களம் அமைந்துள்ளது எனவே யாழ்ப்பாணம் மாநகரசபை இதில் கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த நிலவை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரசபையின் எதிர்ப்பையும் மீறி சிலை வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி அதற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த இந்த விடயங்களில் கட்சி பேதங்களின்றி செயற்படுவது மிக மிக அவசியமானது.
குறிப்பாக இந்த எதிரப்புக்கள் அல்லது தடைகளை தடையை மீறி பௌத்த சின்னங்கள் அங்கே நிறுவப்படுமாயின் அவை அகற்றப்படும் வரை யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து சபை அமர்வு தொடர்ச்சியாக புறக்கணித்து அந்த பௌத்த சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தால் அவை அப்புறப்படுத்தப்படும் வரை சபை அமர்வு புறக்கணித்து தமது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் அதற்கு சபை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே அழைப்பு விடுக்கின்றேன்.
மேலும் வடக்கில் பௌத்த சின்னங்கள் படிப்படியாக முறை புதிதாக முளைத்து வருகின்றன யாழ்ப்பாணத்தில் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சனை மீண்டும் தொடருமாயின் மாபெரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் அதற்கு இங்குள்ள வர்த்தக சங்கங்கள் பொதுமக்கள் அரசியற் கட்சிகள் பொது மக்கள் என அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment