புலிகளும் ரெலோவும் இணைந்து செயற்பட்டிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும், ஐந்து கட்சிகளும் மீள இணைய வேண்டும், போனஸ் வாழக்கையே வாழ்கிறோம் - செல்வம் - Yarl Voice புலிகளும் ரெலோவும் இணைந்து செயற்பட்டிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும், ஐந்து கட்சிகளும் மீள இணைய வேண்டும், போனஸ் வாழக்கையே வாழ்கிறோம் - செல்வம் - Yarl Voice

புலிகளும் ரெலோவும் இணைந்து செயற்பட்டிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும், ஐந்து கட்சிகளும் மீள இணைய வேண்டும், போனஸ் வாழக்கையே வாழ்கிறோம் - செல்வம்


தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் இணைந்து செயற்பட்டிருந்தால் இன்றைக்கு ஈழம் கிடைத்திருக்குமென மேற்படி இயக்கத்தின் அதாவது ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் கிளைக் குழுக் கூட்டம் நாவலர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அக் கூட்டத்தில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்த யாழ் மண்ணிலே தான் ஆயுதப் போராட்டத்தை தமிழீழ விடுதலை இயக்கம் உருவாக்கியது. எங்களுடைய தலைவர்களான தங்கத்துரை குட்டிமணி போன்றவர்களுடைய அந்த மறைமுக செயற்பாட்டின் வெளிப்பாடாக தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்தி இந்த யாழ் மண்ணிலே தான் செயற்பட்டது. அந்தப் போராட்டத்தில் பங்கு பற்றிய பலர் இன்றும் எங்களுடன் இருக்கின்றார்கள்.

இந்த ஆயுதப் போராட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றது தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய இந்த இரண்டும் குறித்தே நான் சொல்ல வேண்டும். அந்த ஆயுதப் போராட்டத்தில் இந்த இரண்டு இயக்கக்ஙகளும் தான் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சிம்ம சொப்பனமாகச் செயற்பட்ட வரலாற்றை எழுதியிருக்கின்றன.

அந்தவiயிலே எங்களுடைய மக்களின் விடுதலைக்காக மக்களின் எதிர்கால வாழ்விற்காக எங்களுடைய மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக தங்களை உயிர்களை அர்ப்பணித்து தங்களுடைய உயிரை துச்சமென மதித்து யாழ்ப்பாண மண்ணிலே இந்த ஆயுதப் போராட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வாறு உருவாக்கப்பட்டு பல வரலாற்றைக் கொண்ட எமது விடுதலை இயக்கம் பல சோதனைகளைச் சந்தித்தது.

ஆரம்பத்திலே நாங்கள் எங்களுடைய தலைவர்களை வெலிக்கடைச் சிறைகளிலே காவு கொண்டோம். அதன் பின்பு சகோரப் படுகொலைகள் அரங்கேறின. நான் ஏற்கனவே சொன்னது போன்று அந்தக் காலப் பகுதியில் ரெலோவும் புலிகளும் தான் பிரதான இயக்கங்களாக இருந்தார்கள். ஆனால் தொடர்ந்தும் அவ்வாறு இணைந்து செயற்பட முடியாமல் போனது. அது தமிழர்களின் சபாக் கேடு என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இன்றைக்கு அந்த இரண்டு இயக்கங்களும் ஒன்றாக இருந்திருந்தால் இன்றைக்கு ஈழம் கிடைத்திருக்குமென்று நான் நினைக்கின்றேன்.  தமிழர்களின் சாபக்கேடு என்னவோ சகோதரப் படுகொலை என்ற ஒன்று எங்களுக்குள் ஏற்பட்டது. அந்தச் சகோதரப் படுகொலைகளில் சிங்கள தேசம் எங்களைப் பார்த்து எள்ளிநகையாடியது.

எங்களுடைய சகோரதப் படுகொலைகள் அவர்களுக்கு நல்ல வரப்பிரசாதமாக ஏற்பட்டிருந்தன. இருந்தாலும் மீண்டும் விடுதலைப் புலிகள் தங்களுஐடய செயற்பாடுகளைச் செய்தார்கள். ஆனால் அதே நேரத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் முற்றாக இல்லாமல் போய்விட்டது என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் மீண்டும் தனது செயற்பாட்டை தொடர்ச்சியாக செய்து வந்தது.

இந்த இடத்தில் இரண்டு இழப்புக்களை நாங்கள் குறிப்பிட வேண்டும். அதில் முதலாவது தலைவர்களுடைய மறைவுஇ இரண்டாவது சகோதரப் படுகொலைகள்இ இவ்வாறான நிலைமைகளின் பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முன்னணி வகித்த ஒரு கட்சியாக இருக்கிறது. அதற்கு இங்கு நான் சாட்சி கூற முடியும்.

நீங்கள் நாங்கள் எல்லாரும் தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருக்கிறோம் என்று சொல்கிற போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த தமிழீழ விடுதலை இயக்கத்திலே இன்றைக்கு மாநகர சபை பிரதேச சபை இன்னும் இந்த சபைகளிலே அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய அங்கத்வதர்கள் என்று சொல்கிற பொழுது பெருமைக்குரியதாக உள்ளது.

ஆகவே கூட்டமைப்பை உருவாக்கின பொறுப்பிலே தமிழீழ விடுதலை இயக்கம் தனது தொடர்ச்சியான அந்தப் பயணத்திலே இன்றை வரைக்கும் அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதிலே இன்றைக்கு ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது நான் ஏற்கனவே சொன்ன சிறிய சூறாவளி மாதிரி எங்களுஐடய கட்சியில் இருந்து உண்மையில் நான் அவரைப் பற்றி கருத்துச் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறென்.

உண்மையில் எங்கள் கட்சியில் எங்கைள எல்லாம் உருவாக்கிய பெரியவர் சிறிகாந்தா. ஆனால் ஏன் ஒரு சிறிய விடயத்தை வைத்துக் கொண்டு அதாவது கொள்கை ரீதியான செயற்பாடு இல்லாத இந்த நாட்களிலே வெறும் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியுடன் நாங்கள் போகக் கூடாது தான் கொள்கை என்ற ரீதியில் புதியதாக ஒரு கட்சியை உருவாக்குதென்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்த வகையிலே இன்றைய சூழலில் இந்த ஐந்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்பது என்னுடைய கருத்து. அது எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கத்தின் கருத்தாக நான் அதனைப் பார்க்கிறேன். அவ்வாறு ஐந்து கட்சிகளும் ஒன்றிணைகிற பொழுது நிச்சயமாக 22 ஆசனங்களை இந்தத் தேர்தலிலே நாங்கள் பெற முடியும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

அப்படி இருக்கின்ற போது பல கட்சிகள் உருவாகினால் தமிழர்களுடைய வாக்குகள் பிரிகின்ற போது சிங்களக் கட்சிகளுடைய ஆளுமை வடக்கு கிழக்கிலே நிச்சயமாக காலூன்றி அது எங்களுடைய தேசத்திலே தமிழர்கள் புர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றைச் சிதைக்கின்ற தமிழர்கள் புர்வீகமாக வாழ்ந்த வரலாறு இல்லை என்று சொல்கின்ற அந்த செயற்பாட்டைச் செய்கின்ற வiயிலே அவர்கள் இந்தத் தேர்தலிலே கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது எங்களுடைய இனம்இ நிலம்இ சார்ந்த போராட்டங்கள் அத்தனையும் மழுங்கடிக்கப்படக் கூடிய அபாய நிலைக்கு நாங்கள் தள்ளப்படப் போகின்றோம்.

இது அரசியலில் அனுபமுள்ள சிறிகாந்தாவிற்கு ஏன் தெரியவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. ஆகவே தமிழிழ விடுதலை இயக்கம் இந்த சின்ன விசயத்திற்காக அது பலயீனப்படாது என்பதே என்னுடைய கருத்து. எவ்வளவோ பிரச்சனைகளைத் தாண்டி வந்திருக்கிறோம்.

சகோதரப் படுகொலையில் கூட எமது இயக்கம் இல்லாமல் போகின்றது என்று சொல்லுகின்ற நிலைமை இருந்தும் இப்பொழுதும் தமிழீழ விடுதலை இயக்கம் இருந்து கொண்டிருக்கின்றது என்ற வரலாற்றை என்றைக்கும் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிற சந்தர்ப்பத்திலே எங்களைப் பலவீனப்படுத்த யாராலும் முடியாது என்பதே எனது கருத்து.

ஆகவே சிறகாந்தா அண்ணபை; பொறுத்தவரையில் அவர் ஒரு கட்சியை ஆரம்பிப்பது என்பது அவருடைய சொந்த விருப்பம். அந்த விருப்பத்திற்கு நாங்கள் எதிராக கருத்துச் சொல்ல முடியாது. ஆனால்இந்த நேரத்திலே எங்களைப் பலயீனப்படுத்தகின்ற ஒரு சந்தர்ப்பமாக இந்தச் சந்தர்ப்பத்தை பல பேர் விமர்சிப்பது என்பது தான் எங்களைப் பொறுத்தமட்டில் வேதனையானது. ஆகவே தமிழீழ விடுதலை இயக்கம் இன்றை வரைக்கும் தன்னுடைய அரசியல் பயணத்திலே இலங்கை அரசாங்கத்தோடு சோடை போகவில்லை என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் பிரகாரம் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாட்டை மீறி கட்சி நிலைப்பாட்டிற்கமைய நான் செயற்பட்டிருந்தேன். இப்படி பல விடயங்களிலே நாங்கள் கருத்துச் சுதந்திரத்தோடு பேசி வந்தோம்.

ஆகவே நாங்கள் யாருக்கும் அடிமைசாசனமோ அல்லது யாருக்கும் எங்களை விட்டுக் கொடுக்கின்ற செயற்பாட்டைச் செய்பவர்களாக எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு நாளும் இருக்காது. அப்படிச் செயற்படாது என்பது நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்திலே வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறேன்.

;இன்றைக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலே பல பிரச்சனைகள் இருக்கின்ற ஆகவே அதற்கான தீர்வினை அடையக் கூடிய வகையில் ஒவ்வொருவரதும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். அதே நேரத்தில் இன்றைக்கு குறிப்பாக ஐ.நா சபை கொண்டு வந்த தீர்மானங்களை இன்றைய புதிய அரசு நிராகரிக்கப் போகிறார்கள் என்று சொல்லபடுகிறது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவதற்காக எந்தவகையில் செயற்பட வேண்டுமோ அதற்கேற்ற வகையில் எமது இயக்கம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு எங்கள் மக்களுடைய பிரச்சனைகளை நாங்கள் கையிலெடுத்தச் செய்கின்ற போது தான் மக்கள்மயப்படுத்திச் செயற்பட முடியும்.

ஏன்னைப் பொறுத்தவரையில் நாங்கள் பலமாகத் தான் இருக்கிறோம். அது அசைக்க முடியாது. நாங்கள் பலவினமானவர்கள் அல்லர். தமிழீழ விடுதலை இயக்கம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கின்ற வரலாற்றிலே சிங்கள தேசத்திற்கு எதிரான நடவடிக்கையை முதன் முதலாகச் செய்த அமைப்பு எங்கள் அமைப்பு தான்.

அதே போல கூட்டமைப்பை உருவாக்கின காரணத்தால் அந்தக் கூட்டமைப்பை நாங்கள் சரியான முறையிலே அதாவது மக்களுடைய எதிர்பார்ப்பைச் செயற்படுத்த வேண்டுமென்ற அந்த நோக்கத்தோடு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் அதற்கமையவே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். உயரும்.

ஆகவே யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கிய மண். ஆயுதப் போராட்டத்தை உலக ரிதியாக கொண்டு வரப்பட்ட சூழலை உருவாக்கிய மண் யாழ் மண்இ இந்த மண்ணிலெ தமிழீழ விடுதலை இயக்கம் தனது சாதனையை படைத்தது. அந்த நிலையிலே எந்த நோக்கத்திற்காக நாங்கள் மக்களுடைய விடுதலைக்ககாக தங்கள் உயிரை தியாகம் செய்து துச்சமாக மதித்தவ இளைர்கள் செயற்பட்டனர்.

இன்றைக்கு எங்கள் வாழ்க்கை எல்லாம் ஒரு போனஸ் வாழ்க்கை தான். இன்றைக்கு கடவுள் தந்த அந்த போனஸ் வாழ்ககையை தான் றாங்கள் வாழ்கிறொம். ஏனனில் சண்டையில் எங்களுக்கு என்னவும் நடந்திரக்கலாம்.அனால் ஆண்டவன் ஏதோ கொடத்திரக்கிறொன். அதே போல உங்களுக்கும் கொடுத்திரக்கிறான். எமது இயக்கத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் போராளியாக தங்களைக் கரத வேண்டும்.

புதிய அரசாங்கம் புதிய ஐனாதிபதி என பல பிரச்சனை எமது மக்களுக்கு இருக்கிறது. எமத மக்கள் தமது வாக்குகளை ஐனாதிபதிN தேர்தலிலே சிவாஐpலிங்கத்திற்கு போடவில்லை. சிவாஐpலிங்கத்திற்குப் போட்டிருந்தால் அது இனவாதம் என்று சிங்கள சேம் சொல்லாலம். ஆனால் யாருக்குப் போட்டார்கள் என்றால் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சஐpத் பிரேமதாசாவிற:குத் தான் போட்டார்கள். அது இனவாதம் அல்ல.

ஆனால் சிங்கள மக்கள் தங்களுடைய வாக்குகளை இன்னொரு சிங்கள பெரும்பான்மையாளுக்கு பெருவாரியாக வழங்கிளார். ஆதனைப் பார்த்தால் ஈழம் மாதிரித் தான் இரக்கும். அப்படி வாக்குகளில் ஒரு செய்தியை அவர்கள் சொல்லியிரந்தனர். அதாவது கடந்தமுறை ஐனாதிபதி தேர்தலில் மைத்திபாரலவை வருகின்ற போது நாங்கள் தான் தீர்மானிக்கிற சக்தியாக இருந்தோம்.

இந்த நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தை கொடுக்கக கூடாது என சிங்கள மக்களும் புது;த பிக்குளும் உணர்ந்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருகிகனிற்னர். இதில் நாங்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் என்ன நடக்குமென்றால் இதைவிட மிக மோசமான சூழலிலே நாங்கள் உள்ளாவோம்.

ஆகவெ எமக்குள் ஒற்றுமைய வேண்டும். அந்த ஒற்றுமை பலப்பட வேண்டும் பேணப்பட வேண்டும். யாழ்ப்பாணத்திலே எந்த தொய்வும் எங்களுக்கு இல்லை எமது இயக்கம் நிமிர்ந்து தான் நிற்கிறது. அது தன்னுடைய செயற்பாட்டை இனிவரும் காலங்களிலே மிக மூர்க்கத்தமனாகச் யுhழ்ப்பாணத்தில் அது செய்யும். ஏங்களுடைய மக்களுக்காக எங்களுடைய பிரதிநிதிகள் செய்த காட்டுவார்கள். என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்..

0/Post a Comment/Comments

Previous Post Next Post