யாழில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் - Yarl Voice யாழில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் - Yarl Voice

யாழில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்


யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளினான மணல் அகழ்வு வாள் வெட்டுக்கள் கொள்ளைக் கும்பல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு மற்றும் போலீசார் உடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக சட்டவிரோத மண் அகழ்வு வால்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மற்றும் வழிப்பறி போன்ற குற்றச் செயல்கள் கட்டுப்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

 குறித்த கலந்துரையாடலில் போலீஸ் மூத்த அதிகாரிகள் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post