தமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி, புலிகள் தொடர்பான அவரது கூற்றை வண்மையாக கண்டிக்கிறோம் - செல்வராசா கஜேந்திரன் - Yarl Voice தமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி, புலிகள் தொடர்பான அவரது கூற்றை வண்மையாக கண்டிக்கிறோம் - செல்வராசா கஜேந்திரன் - Yarl Voice

தமிழர்களுடைய பிரச்சனையை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி, புலிகள் தொடர்பான அவரது கூற்றை வண்மையாக கண்டிக்கிறோம் - செல்வராசா கஜேந்திரன்


தமிழர்களுடைய பிரச்சனை ஒற்றையாட்சிக்குள் முடக்க சம்மந்தன் முயற்சி புலிகள் தொடர்பிhன அவரது கூற்றை வண்மையாக கண்டிக்கிறோம் தமிழ்த் தேசி மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

.அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.


தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவாக நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில் சம்பந்தன் அவர்கள் ஆற்றிய கொள்கைவிளக்க உரைதொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவிரும்புகின்றோம்.

ஆவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக நடாத்தப்படுகின்றார்கள் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தமிழர்கள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு கூறிய அவர் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட 13ஆம்திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதாகவே அவரது உரை முழுவதும் அமைந்துள்ளது.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சியிலிருந்த பிறேமதாசா அரசு மங்கள முணசிங்க ஆணைக்குழு மூலம் மேற்கொண்ட பரிந்துரைகள் சந்திரிகா அரசு பாராளுமன்றில் சமர்ப்பித்த அதிகாரப் பகிர்வு யோசனைகள் மகிந்த காலத்தில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு எல்எல்ஆர்சி பரிந்துரைகள் என்பன 13ஆம் திருத்தச் சட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் ஆனால் அவை அனைத்து பின்னர் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பிலே போடப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். 

1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைபெற்ற புதிய அரசியல் அரைப்பு உருவாக்கத்தின்போது அதனை ஓர் சமஸ்டி அரசியல் அமைப்பாக கொண்டுவருவதற்கான யோசனைகளை தந்தை செல்வா முன்வைத்திருந்தார். எனினும் அவரது கோரிக்கைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டு முழுமையான ஒற்றையாட்சி அரசியலமைப்பாக அது நிறைவேற்றப்பட்டது.

ஆன்றய தினம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நிராகரித்து அதனை எதிர்த்து தனது பதவியை இராஜநாமாச் செய்வதாகவும்இ தனது தொகுதிக்கு இடைத் தேர்தல் நடாத்துங்கள் அத்தேர்தலில் தான் தோற்றால் இந்த அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஏற்கிறார்கள் என்றும் தான் வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் அரசியல் யாப்பை நிராகரிக்கிறார்கள் என்றும் சவால் விடுத்து பதவியை துறந்தார்.

அதன் பின்னர் 1975ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வா அவர்கள் அமோக வெற்றிபெற்றிருந்தார். அதனூடாக அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தமிழரகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் பிற்பாடு 76ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தரப்புக்கள் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனித்து தமிழரசுக் கட்சியாக அத்தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் 77 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்களாணை கோரியிருந்தது.

அதன் பின்னர் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை வலியுறுத்தினார்கள். ஆதனடிப்படையிலேயே ஓர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை கோரியிருந்தார்கள்.

 இந்தச் செயற்பாடுகளுக்கு ஓர் ஜனநாயக ரீதியான அங்கீகாரத்தை பெறும் நோக்கில் 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஆதற்குள் பல்வேறு தரப்புக்களும் உள்வாங்கப்பட்டு அக்கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு புலிகள் மக்களைக் கோரியிருந்தார்கள்;. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பேராதரவை வழங்கியிருந்தார்கள்.

தந்தை செல்வாவுக்குப் பின்னர் தமிழ் முஸ்லீம் மக்களை விடுதலைப் புலிகள் ஒன்றிணைத்திருந்தார்கள். குறிப்பாக 2004ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் பதவிக்கு ஒரு முஸ்லீம் நபரை நியமித்திருந்தார்கள். அந்தளவுக்கு முஸ்லீம் மக்களை அரவணைத்து தமிழ் முஸ்லீம் உறவுளை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோணத்தில் விடுதலைப் புலிகளது செயற்பாடுகள் அமைந்திருந்தது.

ஆனால் இந்தத் தீவிலே சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் தீர்வு ஒன்று எட்டப்படல் வேண்டும் என்பதிலும் புலிகள் உறுதியாக இருந்தார்கள்.

அந்த அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில்த்தான் புலிகளை அழிப்பதற்கான யுத்த முனைப்புக்களில் இலங்கை அரசு ஈடுபட்டது. அந்த முனைப்புக்களின் போது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்த நாடுகள் ஒத்துழைத்ததாகவும் புலிகள் அழிக்கப்பட்டால் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதற்கான வாக்குறுதிகள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த வாக்குறுதிகளிலிருந்து தற்போது அரசு நழுவ முயல்வதாகவும் அதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் சம்பந்தன் ஐயா குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் மிகவும் வருந்தக் கூடிய விடயம் என்னவெனில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்குரிய தீர்வாக 13ஆம் திருத்தத்தினுள் திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சம்பந்தன் ஐயா வெளிப்படுத்தியதன் விளைவாகவே விடுதலைப் புலிகளை அழிக்கலாம் அழித்த பின்னர் தமிழர்களது அரசியலை 13ஆம் திருத்தத்தினுள் முடக்கலாம் என்ற முடிவுக்கு இந்த உலகநாடுகள் செல்லக் கூடியதாக இருந்ததுடன் அந்த அடிப்படையிலேயே இந்தப் போருக்கான ஆதரவு வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிந்த பின்னர் இந்த கோட்டாபய ராஜபக்சவின் அண்ணன் மகிந்த ராஜபக்ச 2010இல் சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றபோது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

ஏங்களைப் பொறுத்த வரையில் விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கு நியாயமான நீதியான சமத்துவமான அரசியல் தீர்வாக தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒருநாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்பதில் குறியாக இருந்து உறுதியாக ஈடுபட்டிருந்தார்கள்.

ஆனால் இன்றோ சம்பந்தன் ஐயா சொல்கிறார் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம் அனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கூறி அதற்குத் தீர்வாக அவர் முன்வைக்கின்ற விடயம் 13ஆம் திருத்தச் சட்டமாகும். ஆனால் 13ஆம் திருத்தச் சட்டம் என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது.

ஓற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை.   துமிழர்களது நிலங்களையோ பொருளாதாரத்தையோ கலாசாரத்தையோ இந்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வின் மூலம் ஒருபோதும் பாதுகாக்க முடியாது.

இவர்கள் வாய்கிழிய தீர்வு தொடர்பாகப் பேசும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரும் சம்பந்தன் ஐயாவும் 2015ஆம் ஆண்டு இராஜபக்ச அரசு வீழ்த்தப்பட்டு நல்லாட்சி என்னும் பெயரில் புதிய அரசு கொண்டுவரப்பட்ட பிற்பாடு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் ஓர் வாக்குறுதியை வழங்கியுள்ளது. அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வழங்குவதற்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றனை உருவாக்கப் போவதாக கூறியுள்ளது. அதனை சம்பந்தன் ஐயா தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கூறியவாறு புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட பிற்பாடு அந்தப் புதிய அரசியல் யாப்பை ஓர் ஒற்றையாட்சி அரசியல் யாப்பாக சமஸ்டியை நிராகரிக்கின்றஇ சிங்கள பௌத்த மேலாண்மையை உறுதிப்படுத்துகின்ற அரசியலாப்பாக கொண்டுவருவாற்க இவர்கள் முழுமையாக இணங்கியுள்ளார்கள்.

 பேளத்தம் அரச மதம் என்பதற்கு எழுத்து மூலமான சம்மதத்தினை சம்பந்தன் ஐயா தெரிவித்துள்ளார். பேளத்தம் அரச மதம் என்பதற்கு எழுத்து மூல சம்மதம் தெரிவித்து விட்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதற்கும்இ வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும் சமஸ்டியை கைவிடுவதற்கும்இ அந்த புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் தீர்வு காண்பதற்கு அவர்கள் நேற்றவரை முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். கடந்த ஒக்டோபர் மாதம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு கட்சிகளின் கூட்டம் நடைபெற்று கூட்ட முடிவில் ஆறு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஒப்பமிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.

அந்தக் அறிக்கையை வெளியிடும்போது நாங்கள் வலியுறுத்திய விடயம் புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதாகும். ஆனால் அவர்கள் அந்த இடைக்கால அறிக்iயை நிராகரிக்க முடியாதென கூறி மறுத்துவிட்டனர். தமிழரசுக் கட்சி ரெலோ புளோட் ஈபிஆர்எல்எவ் விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சி உட்பட ஐந்து கட்சியினரும் கூட்டாக மறுத்து விட்டார்கள்.

அந்த இடைக்கால அறிக்கை என்பது தெட்டத் தெளிவாக பௌத்தம் அரச மதம் என்பதனையும் ஒற்றையாட்சி என்பதனை வலியுறுத்துவதாகவும் சமஸ்டியையும்இ வடக்கு கிழக்கு இணைப்பையும்  நிராகரிப்பதாகவும் அமைந்துள்ளது. அவ்வாறான இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் தாம் தீர்வுக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர்கள் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்கள்.

அவ்வாறு கூறிவிட்டு இன்று மாநாட்டைக் கூட்டி தேர்தல் வரப்போகின்ற நேரத்தில் 13ஆம் திருத்தச் சட்டததை வலியுறுத்திவரும் அதேவேளை இறுதியில் சமஸ்ட்டி பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் சம்பந்தன் ஐயா பேசியுள்ளார்.

சுமஸ்டி என்ற வார்த்தை தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக பேசப்பட்ட வார்த்தையே தவிர சமஸ்டியை அவர்கள் முற்றாகக் கைவிட்டுள்ளார்கள். ஏற்கனவே ஒற்றையாட்சி அடிப்படையில் ஓர் தீர்வைக் காண்பதற்கு இணங்கிவிட்டார்கள். எழுத்து மூலமான சம்மதத்தையும் அவர்கள் தெரிவித்து விட்டார்கள். இந்த விடயத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சும்பந்தன் ஐயா கூறியுள்ளார் அரசியல் தீர்வை தேடிப் போகின்ற அரசியல்வாதிகள் தங்களுக்குத் தேவையில்வைஇ கற்பனையில் வாழ்கின்ற அரசியல் வாதிகள் தங்களுக்குத் தேவையில்இ என்ன செய்வதென்று தெரியாது தவிக்கின்ற அரசியல் வாதிகள் தங்களுக்குத் தேவையில் என்றும் ஏளனமாகக் கூறியுள்ளார்.

அப்படியானால் அன்று அந்த ஆறு கடசிகள் கூடித் தயாரித்த 13 ஆம்ச கோரிக்கைகளில் நாங்கள் வலியுறுத்திய தமிழ்த் தேசம் இறைமை அங்கீகரிக்கப்ட்ட தீர்வு வேண்டும் என்ற எமது  நிலைப்பாட்டுக்கு இணங்கி அந்த ஐந்து கட்சிகளும் கையொப்பம் இட்டுள்ளார்கள். ஆப்படியானால் எதற்கான அதில் கையொப்பம் இட்டீர்கள்? தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகத்தானே நீங்கள் கையொப்பம் இட்டீர்கள்.

கோட்டாபய ராஜபக்சவுக்குப் பின்னால் மக்களை இழுத்துச் சென்று 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கான உபாயத்திற்குள் சம்பந்தன் ஐயா இப்போது காலடியெடுத்து வைத்துள்ளார்.

துந்தை செல்வா சொன்னாராம் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற தலைவர்களை எதிர்க்கக் கூடாதென்று கூறினாராம் என்று கூறியுள்ளார். இங்கு எதிர்ப்பது ஆதரிப்பது என்பது விடயமல்ல. மாறாக தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு எத்தகைய தீர்வு தேவை என்ற அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்.

அந்த அடிப்படையிலேயே தந்தை செல்வா முடிவுகளை எடுத்தார். 72ஆம் ஆண்டில் ஒற்iறாட்சி அரசியல் யாப்பை எதிர்ப்து தனது பதவியை துறந்தார். 75ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித் தீர்வை முன்வைத்துப் போட்டியிட்டார்.

 76ஆம் ஆண்டில் வடக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தாரென்றால் இது சிங்கள மக்கள் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அல்ல.  பேரினவாதத் தலைவர்கள் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்ற அடிப்படையிலோ அவர்கள் கோவிப்பார்களா கோபிக்கமாட்டார்களா என்ற அடிப்படையில் அல்ல. எங்களது இனம் இந்தத் தீவில் பாதுகாப்பாக வாழ்வதற்கு என்ன தீர்வு அவசியம் என்ற அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டது.

ஆந்த அடிப்படையில் இன்றும் நாங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றோம் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தத் தீர்வும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. 13ஆம் திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதே வேளை ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு இணங்கிவிட்டு புதிய ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கையை சேர்ந்து தயாரித்துவிட்டு இப்போது தேர்தல் காலம் நெருங்கும்போது சமஸ்டி என்றும் அதிகாரப் பகிர்வு என்றும் வார்த்தை யாலங்களைப் பேசுகின்றார்கள்.

ஓற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு ஒருபோதும் சாத்தியமில்லை. ஆகவே இவர்களது இந்த ஏமாற்றுக்களுக்கு மக்கள் எடுபடக்கூடாது. ஏதிர்காலத்தில் இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எம்மைப் பொறுத்த வரை எமது இனம் ஓர் இக்கட்டான கட்டத்தில் உள்ளது. எஞ்சியிருப்பதனையும் பறித்தெடுக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான அரசியல் தீர்வான தமிழ்த் தேசம் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஓர் சமஸ்டி தீர்வை நோக்கி நேர்மையாகக் கொண்டு செல்லக் கூடிய ஒரே ஒரு தலைமையாக  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே உள்ளது என்பதனை இந்த சந்தற்பத்தில் தெளிவாக மீளவும் வலியுத்துவதுடன் எமது மக்கள் இதனைச் சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை நல்லது என்ற சம்பந்தன் ஐயாவின் கருத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஏம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக நேர்மையாகவும் உண்மையாகவும் விடுதலைப் புலிகள் உழைத்தவர்கள்.

சம்பந்தன் ஐயா தேர்தல்களின் தோல்வியுற்று இருந்த நிலையில் அவரையும் அரவணைத்து தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பை உருவாக்கி 2001 இலும் 2004 இலும் அவர் தேர்தலில் பெற்றிபெறவும் உதவியிருந்தார்கள்.

புலிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று அவர்களது ஆதரவுடன் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து கொண்டு புலிகளது பரிசாக நன்கொடையாக தலைமைப் பதவியையும் தன்கையில் வைத்துக் கொண்டே விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணை நின்றது மட்டுமல்லாமல் இன்று புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இன்றும் புலிகளை  அறாயகவாதிகள் என்றும்இ ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்றும் சித்தரித்து  அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகச் செயற்படுகின்றார். அவரது இக் கருத்துக்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கேள்வி: சம்பந்தன் ஐயாவின் உரையில் அவர் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு கூறும்போது அவ்வாறு கூறியதாக சொன்னார் என்று கூறப்படுகின்றது.

பதில்: நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படும் வகையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபை கோரி பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தபோது அரசாங்கம்  விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு முயன்றது.  அவ்வேளையில்  புலிகள் வலியுறுத்தும் நிலைப்பாடு தங்களது நிலைப்பாடு இல்லை தாம் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வுக்குத் தயார் என்ற நிலைப்பாட்டை தூதரக மட்டத்தில் வெளிப்படுத்தி வந்தார் என்பது எமக்குத் தெரியும்.

தூதரகங்கள் எமக்கு அந்த நிலைப்பாடுகளைச் கூறி சம்பந்தன் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் ஆனால் புலிகள் சிங்கள மக்கள் தர விரும்பாததை கோருவதாகவும் புலிகள் இந்தப் படத்திலிருந்து அகற்றப்பட்டால்த்தான் சம்பந்தன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதாவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்கள மக்கள் கொடுக்கக்கூடிய அதாவது சிங்களத் தலைவர்கள் கொடுப்பதற்குத் தயாரான் தீர்வை கொண்டுவந்து ஓர் நடைமுறைச் சாத்தியமான தீர்வை அடைய முடியும் என்றும் அந்த அடிப்படையிலேயே தாம் இந்த யுத்தத்திற்கு உதவி செய்வதாகவும் கூறினார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post