அழிவடைந்து செல்லும் விவசாயம் பாதுகாக்கப்படுமா? பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமா? - Yarl Voice அழிவடைந்து செல்லும் விவசாயம் பாதுகாக்கப்படுமா? பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமா? - Yarl Voice

அழிவடைந்து செல்லும் விவசாயம் பாதுகாக்கப்படுமா? பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமா?


இலங்கையைப் பொறுத்தவரையில் இதுவொரு விவசாய நாடு. அதிலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயத்திற்கு சிந்ததொரு நிலம். இவ்வாறு விவசாயத்திற்கு சிறந்த நாடு, சிறந்த நிலமென்ற அடிப்படை இருக்கின்றமையால் வடபகுதி மட்டுமல்லாது முழு நாட்டினதும் பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாகவே காணப்படுகின்றது.

இதனால் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு எனக் கூறிக் கொண்டிருக்கையில் இந்த விவசாயத்தையே விவசாயிகள் கைவிட்டுச் செல்கிற துர்ப்பாகிய நிலைமைகளே தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன. வட பகுதியைப் பொறுத்தவரையில் இன்றைக்கு விவசாயிகள் தொழிலைக் கைவிட்டுச் செல்வதால் விவசாய உற்பத்தி என்பது குறைவடைந்து கொண்டு செல்வதாகே புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமைகளுக்கு பல்வேறு காரணங்கள் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தாலும் அந்தக் காரணிகளுக்கான நடவடிக்கைகள் என்பன எடுக்கப்படாத நிலைமையே தொடர்ந்தும் நீடித்தும் வருகின்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விவசாயம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் வடபகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலுள்ள மக்களும் நாடும் பொருளாதார ரிதியாக முன்னேற்றமடையக் கூடியதாக அமையும்.

குறிப்பாக வட பகுதியின் பொருளாதாரம் என்பது விவசாயம் சார்ந்ததாகவே இருக்கின்றது. ஆனால் கடந்த யுத்த காலத்தில் அந்தப் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தன. இன்றைக்கு யுத்தம் முடிவைடந்து பத்து வருடங்கள் ஆகின்ற போதும் விவாசாயம் என்பது சவால்கள் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்தச் சவால்களைத் தாண்டி விவிசாயம் மீட்சி பெற வேண்டுமாயின் அதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.

இலங்கைகைப் பொறுத்தவரையில் இதுவொரு விவசாய நாடு தான். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பொருளாதாரம் என்கிறது விவசாய பொருளாதாரம் தான். இந்த விவசாயப் பொருளாதாரத்தில் பணப்பயிர்களும் இருக்கிறது. அதே நேரத்தில் அன்றாடத் தேவைகளுக்கான உணவுப் பயிர்களும் இருக்கிறது. இந்த இரண்டுமே சேர்த்து தான் விவசாயத்திற்குள் அடங்குகின்றன.

பணப்பயிர்கள் என்பதில் புகையிலை பச்சை மிளகாய் உள்ளிட்ட பலவும் பணப்பயிர்களாகக் கருதப்படுகின்றவை. மற்றைய பயிர்கள் எல்லாமே உணவு உற்பத்தி சார்ந்த பயிர்களாகவே இருக்கும். அடுத்த வருடத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டில் புகையிலைக்கு தடை என முன்னனைய ஐனாதிபதி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் புகையிலைக்கு இருக்கக் கூடிய தடை என்பது விவசாயிகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பாதிப்புக்கள் காரணமாகவே பல விவசாயிகள் புகையைலையின் உற்பத்தியையே கைவிட்டுச் செல்கின்ற நிலைமை உள்ளது. அவர்களில் சிலர் வேறு உற்பத்திக்குச் சென்றாலும் ஏனையவர்கள் விவசாயத்தில் இருந்து ஒதுங்குகின்ற நிலைமையும் காணப்படுகிறது. உண்மையில் பணப்பியரான புகையிலையை தடை செய்வதாயின் அந்த விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டு அதற்கான சந்தை வாய்ப்புக்கள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டாலும் விவசாயிகளைப் பாதுகாப்பதாக அந்த நடவடிக்கைகள் இல்லை என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டாகவும் இருக்கின்றது. உண்மையில் விவசாயிகளுக்கான வசதிகள் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு விவசாயத்தை ஊக்குவித்து பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கின்ற தேவையே இன்றைக்கு காணப்படுகின்றது.

இதில் விவசாயப் பொருளாதாரம் என்கிறது என்ன தான் தொடர்ச்சியாக நட்டத்தைச் சந்தித்தாலும் இற்றை வரைக்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பணவருவாயை ஈட்டக் கூடிய பயிர்களாக வெங்காயமும் மிளகாயும் இருக்கின்றன. சிறிமாவோ பண்டார நாயக்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் அவர் வெளிநாட்டு இறக்குமதியைத் தடை செய்து விவசாயத்தை கிராம மட்ட ங்களில் ஊக்குவிக்கிற காலப்பகுதியில் மிளகாய் விற்கு வீடு கட்டி மிளகாய் விற்றே கார் வாங்கி ஒடிய விவசாயிகளும் இருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான் வெங்காயமும் குறிப்பாக வடக்கில் அதிலும் யாழ் மாவட்டத்தின் வெங்காயத்திற்கு இருக்கக் கூடிய கிராக்கி எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆகவே உற்பத்தியில் ஒரு பணப் பயிராகவே வெங்காயத்தைக் கருதி அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இலங்கையின் வேறு பாகங்களில் என்ன தான் வெங்காயம் விழைந்தாலும் வெங்காயத்தின் சுவை என்பதும் அதன் காரம் எல்லாம் யாழ் மாவட்ட வெங்காயத்திற்கு வித்தியாசாமாக இருக்குமென்ற சிந்தனைகளும் பலருக்கும் இருக்கின்றன.

இந்த விவசாயத்தை நம்பித் தான் அடிப்படையாகவே எல்லாமே இருக்கும். ஒரு குடும்பம் தன்னுடைய பிள்ளையை வைத்தியருக்கோ பொறியிலாருக்கோ படிப்பித்தாலும் அந்தக் குடும்பத்தின் பின்னணி என்பது ஆரம்பத்தில் ஒரு விவசாக் குடும்பத்தில் இருந்து தான் வந்ததாக இருக்கும்.
ஆனால் விவசாய பொருளாதாரத்திலும் சவால்கள் இருக்கின்றன.

விவசாயத்தில் ஏற்படக் கூடிய நட்டங்கள் காரணமாக விவசாயத்தைக் கைவிடுகிற ஒரு சாரார் இருக்கின்றார்கள். அந்த விவசாயிகளுடைய பிள்ளைகள் உயர் கல்விக்கு வருகிற பொழுது அவர்கள் தங்களுடைய பெற்றோர்கள் விவசாயம் செய்வதை மறுக்கின்ற நிலை காணப்படுகிறது. அதே நேரத்தில் பெற்றோருடன் சேர்ந்து அந்த விவசாயத்தை முன்னெடுக்கின்ற பிள்ளைகளும் இருக்கத் தான் செய்கின்றனர்.

இதே போல நட்டங்கள் காரணமாக விவசாயத்தைக் கைவிடுகின்ற போது அந்த நிலங்கை வீடுகள் கட்டிடங்கள் கட்டுகின்ற இடமாக மாற்றி வருகின்றார்கள். அது குடாநாட்டில் இருக்கக் கூடிய பாரிய பிரச்சனையாக உள்ளது. நெல் வயல்கள் வயற்காணிகளுக்குள் மாத்திரம் கட்டிடங்கள் கட்டப்பட முடியாது என்கிற சட்டம் இருக்கிறது. ஆனால் ஏனைய மேட்டு நிலங்களுக்கு அவ்வாறான சட்டங்கள் இல்லை.

எல்லா விவசாய நிலங்களுமே இன்றைக்கு இங்கு வீடுகளாக மாறிக் கொண்டே போகிறது. அவ்வாறு மாறுகிற போது அதில் ஒருவர் இருவர் தன்னும் விவசாயம் செய்யப் போவதாக இருந்தாலும் அது கூட சாத்தியப்படாத நிலைமையே இருக்கின்றது.

ஏனெனில் அருகில் வீடுகள் வருகின்ற போது வெள்ள ஓட்டம் தடைப்படுத்தப்படும். ஆகவே பயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படும். இந்தக் கட்டிடங்களினாலே நிழல்கள் வரும். அதுவும் பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது உற்பத்தியை பாதிக்கும். இவை எல்லாம் மேட்டு நிலப் பகுதியில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள்.

ஆகவே இது விவசாய பொருளாதாரம் தான். எந்தவகையிலும் இந்த விவசாயப் பொருளாதாரத்தைத் தக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் நிலத்தடி நீர் விவசாய இராசாயனங்களால் நச்சாகின்றதென்ற நிலை ஒன்று உருவாகிறது. அதில் உண்மையும் இருக்கின்றது. ஆகவே சேதன செய்கையை வடக்கில் ஊக்குவிக்க வேண்டும். இராசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் சேதனப் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

அந்த வகையில் ஒரு வழிப்புணர்வை ஏற்படுத்தி சேதன விவசாயத்தில் ஈடுபட வேண்டும். அதற்கான சந்தை வாய்ப்பு விலை கூடவாக இருந்தாலும் அதுவொரு நச்சற்ற உணவு என்கிற நிலை வரும். ஆகவே மக்களிடையே அது தொடர்பான வழிப்புணர்வும் ஏற்படுத்தி அந்த விழிப்புணர்வை ஈடு செய்யும் வகையில் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

ஓவ்வொரு முறையும் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கின்ற பொழுது விவசாயப் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும். அந்த வகையில் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றின் உற்பத்தியில் அவை நிலத்திற்கு கீழ் விளைச்சல் என்றபடியினால் பாதிப்புக்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது.

அதே நேரம் நெற்பயிர்களைப் பொறுத்தவரையிலும் பாதிப்புக்கள் இருப்பதாக சொல்கின்றனர். ஏனென்றால் இங்கு மழை வீழ்ச்சி இருக்கிறது தான் ஆனால் பருவம் தப்பி பெய்கின்ற மழை வீழ்ச்சியினால் தான் இந்தப் பாதிப்பு உருக்கிறது. அதாவது இந்த மழைவீழ்ச்சியின் அளவில் வருடம் பூராகவும் பெய்யக் கூடிய மழை வீழ்ச்சியில் இப்ப ஒரு குறிக்கப்பட்ட காலத்திலேயே அதாவது குறுகிய கால இடைவெளிக்குள் கூடுதலான மழை வீழ்ச்சி வருகிறது. இதனால் கண்டிப்பாக பாதிப்பு வரும். இது தான் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு.

உலகளாவிய ரீதியில் பூமி வெப்பம் அடைவதால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இந்தக் கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பயிர்ச்செய்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பயிரடப்படுகின்ற பயிர்களையும் தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் எந்தக் காலத்தில் என்னதைச் செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

இந்த கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்களுடைய மாற்றஙக்ளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக பறவைகள் கூட் இந்த பருவத்தில் தான் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் என்றது; கூட கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. அது ஏன் என்றால் கால நிலை மாற்றத்திற்கேற்ப அது தன்னை மாத்துகிறது. ஆகவே மனிதர்களும் தங்களுடைய பயிர்ச் செய்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென விவசாய வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான நாட்களில் உற்பத்திகளின் விலைகள் என்பது உயர்வாக இருப்பதாக நுகர்வோரின் முறைப்பாகள் காணப்படுகிறது. உண்மையில் அழிவுகள் இருக்கிற இந்தக் காலத்தில் சந்தையில் கிடைக்கிற பெருட்களின் உற்பத்தி குறைவு என்ற படியால் விலை உயர்வாக இருக்கும்.

ஆனால் விவசாயிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கிடைக்கப் போகின்ற வருவாய் உயர்வாக உள்ளதாக கருத முடியாது. ஏனென்றால் இந்த கல நிலை மாற்றத்தால் குறிப்பாக வரட்சி, மழை வீழ்ச்சி ஆகிய இரண்டாலும் விவசாயிகள் பெருமளவிற்கு பாதிப்புக்களையே சேமித்துக் கொண்டிருக்கின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும் கால நிலை மாற்றத்தால் மாத்திரமே விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற தோற்றப்பட்டை வெறுமனே ஏற்படுத்த முடியாது. உண்மையில் விசாயம் பாதிக்கப்படுவதற்கு பல காணரங்கள் தொடர்ந்தும் இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது.

இதனுர்டாகவே விவசாயிகளை ஊக்குவித்து அவர்களை வழிப்படுத்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் விழிப்புர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கமைய் விவசாய உற்பத்தியில் இருந்து விவசாயிகள் ஒதுங்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படுமிடத்து அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக விவசாய உற்பத்தியை அதிகரித்து விவசாயத்தையும் பாதுகாக்க முடியும். அவ்வாறு செய்யப்படுமிடத்தே விவசாயிகளது வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென்பதே யதார்த்தம்.
                                                            -எஸ்.நிதர்ஷன்-




0/Post a Comment/Comments

Previous Post Next Post