சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சி, சர்வதேசம் அதற்கு இடங்கொடுக்க கூடாது - சம்மந்தன் வலியுறுத்து ( யாழ் உரையின் முழு வடிவம்) - Yarl Voice சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சி, சர்வதேசம் அதற்கு இடங்கொடுக்க கூடாது - சம்மந்தன் வலியுறுத்து ( யாழ் உரையின் முழு வடிவம்) - Yarl Voice

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சி, சர்வதேசம் அதற்கு இடங்கொடுக்க கூடாது - சம்மந்தன் வலியுறுத்து ( யாழ் உரையின் முழு வடிவம்)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

எமது மக்களை எதிர்நோக்குகின்றது எமது எதிர்காலம். எம்முடைய எதிர்காலத்தில் நாங்கள் எவ்விதமாகச் செயற்படப் போகிறோம். தங்களுடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு தங்களுடைய இலக்கை அடைவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்காலத்தில் என்னவிதமாகச் செயற்படப் போகின்தென்பதைப் பற்றி எமது கருத்துக்களை அறிய ஆவலாக இருபபீர்கள்.

அவ்வாறு எமது கருத்துக்களை அறிந்தால் தான் உங்களுடைய கருத்துக்களையும் எமக்குச் சொல்லி அந்த அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாகச் செயற்படலாம். அதை கையாள்வதற்காக நான் சில விடயங்களைக் கூற விரும்பிபுகிறேன்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை. 1988 ஆம் ஆண்டு 13 ஆம் திருத்தச் சாசனம் நிறைவேற்றப்பட்டது. அது தான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம்.

அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளை பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை. 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு அது ஒரு முழுமையான அரசியல் தீர்வாக அமையவில்லை என்ற காரணத்தினால் விசேசமாக அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற பாரர்ளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றிக் கொள்ளாத காரணத்தின் நிமித்தம் அதற்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் அதில் முதலில் ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாசா காலத்திலிருந்த அரசாங்கம் மங்கள முனசிங்க தெரிவுக் குழுவின் மூலமாக அந்தப் 13 ஆவது அரசியல் சாசனத்தை முன்னேற்றுகின்ற ஒரு பிரேரனையை அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.

அதற்குப் பிறகு ஐனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தன்னுடைய காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய அரசியல் சாசனம் அதில் உள்ளடங்கியிருக்கின்ற அதிகாரப் பகிர்வு சம்மந்தமாக ஒரு பரிந்துரைப்பு வைக்கப்பட்டிருக்கின்றது. மூன்றாவதாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவினுடைய காலத்தில் நிபுணர் குழுவை நியமித்து ஒரு சர்வகட்சி மாநாட்டை அமைத்து அதற்குப் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமை தாங்கியிருந்தார்.

அந்தக் குழு; தமது அறிக்கைகயை சமர்ப்பித்திருக்கின்றார்கள். அதில் சொல்லப்பட்டிருக்க கூடிய கருத்து என்னவென்றால் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நடைபெற வேண்டும். அந்தந்தப் பகுதியிலே வாழ்கின்ற மக்கள் தங்களுடைய தலைவிதியை தாங்களே நிர்ணயிக்கக் கூடிய நிலைமைகள் இருக்க வேண்டும். அவ்விதமான அதிகாரப் பகிர்வு உருவாக வேண்டும்.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இந்த விடயம் சம்மந்தமான முறையில் அதிகாரப் பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பார்த்து ஒரு அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கும் படியாக கேட்டிருந்தார். அதனை நிபுணர் குழு அறிவித்திருக்கின்றார்கள். போராசிரியர் திஸ்ஸ விதாரணவும் அறிவித்திருக்கின்றார்.

இவை மூன்றும் 13 ஆம் அரசியல் சாசனத்தை நியாயயமான அளிவிற்கு முன்னேற்றுகின்ற முயற்சிகள். அது பதிவில் இருக்கின்றன. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசயங்கள் தான் இவை. 88 ஆம் ஆண்டு முதலாவது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்தான விடயங்கள் ஒரு முப்பது வருட கால எல்லைக்குள் பதிவில் இருக்கின்றன. இவை மூன்றும் 13 ஆவது அரசியல் சாசனத்தை நியாயமான அளிவிற்கு முன்னேற்றுகின்ற மயற்சிகள் முடிவுகள் பதிவில் இருக்கின்றன.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின்னால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள். ஒரு முப்பது வருட கால எல்லைக்குள் நடந்தன. அதாவது 88 ஆம் அண்டு முதலாவது சாசனம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் தற்போது 2019 ஆம் ஆண்டிற்குள்; இருக்கின்றோம். இந்த முயற்சி முப்பது வருடங்களாக எடுத்து வரப்படுகின்றது. இவை நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட போது ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை கையாளக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டது. பாரர்ளுமன்றத்தால் ஏகமனதாக பிரேரனை நிறைவேற்றப்பட்டு அந்தப் புதிய அரசியல் சாசனம் வர வேண்டும்.

அந்தப் புதிய அரசியல் சாசனத்தில் நான் கூறிய சகல விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.
அரசாங்கம் சர்வதேச ரீதியாக சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதை பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது. பாரதப் பிரதமர் இந்த விடயம் சம்மந்தமாக தன்னுடைய கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரiஐகளாக கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம். .

ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவும் அவருடைய வெளிவிவகாரச் செயலாளர் பேராசிரியர் ஐpஎல் பீரீசும் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13 ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று. அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

இது விடயம் சம்மந்தமாக இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறைகளில் பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பிறகு நியமிக்கப்பட்ட ஒரு முக்கியமான குழு கற்ற பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும். படித்தவர்கள,; பெரியவர்கள், நேர்மையானவர்கள், பக்குவமானவர்கள் மகிந்த ராஐபக்சவால் தெரீவு செய்யப்பட்டு அந்தக் குழு நியமிக்கப்பட்டது அந்தக் குழு நாட்டினுடைய முக்கியமான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்திருக்கிறது.

அதில் நாட்டினுடைய முக்கிய பிரச்சனை என்னவென்றால் இன்றைக்கு சமத்துவமாக எல்லா இனங்களும் வாழவில்லை. அதியுச்ச அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும். நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அதியுச்ச அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமென்று அந்த நல்லிணக்க குழு தன்னுடைய சிபார்சை செய்திருக்கின்றது.

இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றகப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பபட்ட பொழுது அந்தத் தீர்மானததில் இலங்கை அரசாங்கம் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கானுவதற்கு இணங்கியிருக்கின்றது. அதை நாங்கள் வரவேற்கின்றோம். அது நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகவே அது நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த பொழுது; உதவிய நாடுகளான நோர்வே, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஐப்பான, போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அதாவது அதிகபாரப் பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஒரு அரசியல் தீர்வை ஏற்கடுத்துவோம் என்று சொல்லியுள்ளது.

அந்த நாடுகளும் தங்களுடைய கருத்துகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயாமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் எனக்; கூறியிருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்கு கூறியிருக்கின்றது. அதாவது உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சமஷ்டியைப் பற்றி பேசியிருக்கின்றீர்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசியிருக்கின்றீர்கள். ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இவை நிறைவேற்றப்பட வேண்:டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்னவிதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதை செய்ய வேண்டும். அது தான் எங்களுடைய கடமை. அது தான் எங்களுடைய எதிர்காலம்.

ஒரு அரசியல் தீர்வை பேணிப் கொள்கின்ற அரசியல்வாதிகள் இன்றைக்கு எங்களுக்குத் தேவையில்லை. கற்பனையில் வாழ்கின்ற அரசியல் வாதிகள் எமக்குத் தேவையில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கின்ற அரசியல்வாதிகள் எமக்குத் தேவையில்லை. இது ஒரு நீண்ட பயணம். நீண்ட தூரம் நாங்கள் பயணித்திருக்கின்றோம்.

அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்துவமாக நீதி பெற்றவர்களாக சமாதானமாக கௌரவமாக வாழக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும்.

இந்த ஐனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஐயம் செய்த பொழுது இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் கூறிய செய்தி என்னவென்றால் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று இந்தியப் பிரதமர் எதிர்பார்ப்பதாக இலங்கை ஐனாதிபதியிடம் கூறியிருக்கின்றார்.

இது சாதாரணமான சொற்கள் அல்ல. ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.

அந்த ஊடக சந்திப்பின் போது இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுனெ;று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம். அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.

இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. எமது மக்களுடைய அரசியல் தீர்வு சம்மந்தமாக எமது மக்களுடைய அரசியல் பிரச்சனைகள் சம்மந்தமாக இதுவரையில் திவிரமாக ஆழமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஈடுபடாதவர்கள் இந்தக் கருமங்களைக் கையாள முடியாது. அதை எமது மக்கள் புரிந்த கொள்ள வேண்டும். எங்களுடைய மக்களுடைய ஒற்றுமை எங்களது முக்கியமான பலம்.

தந்தை செல்வாவின் முக்கியமான கொள்கைகளைப் பற்றியும் நான் சில விடயங்களை இங்கு பேச விரும்புகின்றேன். தந்தை செல்வா தமிழ் பேசும் மக்களை ஒற்றுமைப்படுத்தினார். வடக்கில், கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் சின்னத்தில் போட்டியிட்டு அவர்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

தந்தை செல்வா தமிழ் மக்கள் கௌரவமாக பாதுகாப்பாக இந்த நாட்டில் வாழ்வதாக இருந்தால் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திற்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது. அவை ஒன்றாக பிணைந்த பொருட்கள். அது இரண்டும் தமிழ் மக்களுக்குரியவை.

தமிழ் பேசும் மொழி எங்கு நிலவுகிறதோ அந்தக் காணி தமிழ் மக்களுக்குரியது. அந்த அடிப்படையில் பண்டா செல்வா-ஒப்பந்தம், டட்லி-சொல்வா ஒப்பந்தம் இலங்கையில் கைச்சாத்திடப்பட்டது. அது தான் அடிப்படை. அத்தகைய அடிப்படை மொழி தமிழ் மொழி, தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசம் அவர்களுடைய காணி வடகிழக்கு, இதை எமது முஸ்லீம் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது பெரியவருடைய முக்கியமான கொள்கை. மூன்றாவது இந்தக் கொள்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் விசேசமாக வடகிழக்கில் தன்னை ஆதரித்து தமிழ் மக்களுடைய ஆணையை பெற்ற தலைவர் தந்தை செல்வா என்பதையும் தமிழரசுக் கட்சி என்பதையும் நிருபித்தார். அது தொடர வேண்டும். நாங்கள் எமது மக்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

56 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது மக்கள் எமது கட்சியை ஆதரித்திருக்கின்றார்கள். அது தொடர வேண்டும். நான் உங்களுக்கு சொல்லிய கடமைகள். நாங்கள் கையாள வேண்டிய கடமைகள் நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய கடமைகள் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் நாங்கள் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை நாங்கள் நிறைவேற்றுவது என்றால் உங்களுடைய ஆணையை முழுமையாக நாங்கள் பெற வேண்டும். அந்த ஆணையின் ஒரு பகுதியேனும் வேறு எவருக்கும் போகக் கூடாது. அது முக்கியம் அத்தியாவசியம். இது தான் எங்களுடைய நிலைப்பாடு .

தந்தை செல்வா 49 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றைக்கு நாங்கள் 2019 ஆம் ஆண்டில் இருக்கிறோம் ஆக 70 ஆண்டுகாலமாக ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். நாங்கள் எங்கே போகின்றோம் என்று எங்களுக்கு தெரியும். அந்த இலக்கை அடைவதற்கு எதைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வாக்குறுதிகள் பெறப்பட்டிருக்கின்றன. அது நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்ற அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான். ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசதரப்பினர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றார்கள்.

அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்று தான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாட்டுகள் சபையினுடைய தீர்மானங்கள், சிவில் அரசியல் உரிமைகள,; பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ய உரிமையுண்டு. இதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. நாங்கள் எவருடனும் மோத விரும்பவில்லை. எங்களுக்கு பெரியவர் நெடுக சொல்லுவார் சம்மந்தன் நாங்கள் சிங்கள மக்களைப் பகைக்க கூடாது, சிங்கள தலைவர்களை நாங்கள் பகைக் கூடாது என்று தான்.

எந்த சிங்களத் தலைவர் சிங்கள மக்களின் ஆதரவைக் கூடுதலாப் பெறுகின்றாரோ அவருக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு நட்புறவு எப்போதும் இருக்க வேண்டும். நாங்கள் இன்றைக்கும் ஒருதரையும் பகைக்கவில்லை. நாங்கள் பகைக்க மாட்டோம். பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளில் தங்களுக்கு கடைசி வரையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனபடியால் எமது எதிர்கால நடவடிக்கைகள் சம்மந்தமான சிந்தனைகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறியிருக்கின்றோம். நாங்கள் பலமான இடத்தில் இருக்கின்றோம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும்; நாங்கள் ஒப்புதல்களைப் பெற்றிருக்கிறோம். அந்த விடயங்கள் எழுத்தில் இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட வேண்டும். அது தமிழ் மக்களை பாதுகத்து தீர்வொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு  சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post