இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படும் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்
இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர்இ தமிழ் சமூகம் இந்த நாட்டிற்குச் செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
அவர்இ மேலும் தெரிவிக்கையில்; 'தமிழ் சமூகத்தினரின் விழுமியங்களும்இ எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில் முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும்இ அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும் அவர்களது கல்விச் சாதனைகள் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாகவே பிரெக்ஸிற்றை நாங்கள் சாத்தியமானதாக்க வேண்டும். பிரெக்ஸிற்றை நிறைவேற்றினால் நாங்கள் தொழில் முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம். தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம். முதலீடுகளை அதிகரிக்கலாம்.
மேலும் பிரெக்ஸிற் சாத்தியமானதும் நாங்கள் எங்களது குடிவரவு கொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம்இ அவுஸ்ரேலியாவில் காணப்படுவதைப் போன்ற புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட குடிவரவுக் கொள்கையை முன்வைக்கலாம்.
இது பிரித்தானியாவுக்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதிசெய்யும். மேலும் இலங்கையில் நல்லிணக்கம் நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும்இ எங்கள் முன்னால் இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான் நம்புகின்றேன். இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன்.' என்று அவர் கூறினார்.
Post a Comment