முகாம்களிலுள்ள மக்களை சொந்த இடங்களில் விரைவாக குடியேற்றுமாறு ஐனாதிபதி பணிப்புரை - அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தகவல்
யாழ்பாணம் மல்லாகம் நீதவான் முகாமில் உள்ள மக்களில் நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி முகாங்களில் தமது வாழ்க்கையினை பல கஸ்டங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
குறித்த முகாமில் 53 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்து. தாங்கள் பிறந்து வழந்த தமது சொந்த நிலத்தில் தாம் வாழவேண்டும் எனவும் மக்கள் அமைச்சரிடம் கேரிக்கை விடுத்திருந்தனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொன்டமான்..
இடம்பெயர்ந்து நீண்டகாலமாக முகாம்களில் உள்ள விரைவாக அதாவது எவ்வளவு தூரம் குடியேற்ற முடியுமோ அவர்களை விரைவாக குடியேற்றுமாறு ஐனாதிபதி என்னிடம் கூறியிரக்கின்றார். அதற்கமைய முகாம்களில் உள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிடுதவற்காக நேரடியாகவே இன்று விஐயம் செய்திருக்கின்றேன்.
இதனடிப்படையில் இந்த மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். இவர்களில் காணி இல்லாதவர்கள் காணிகள் விடுவிக்கப்படாதர்கள் என இரு தரப்பினரும் இருக்கின்றனர். ஆகவே அந்தக் காணிகளை விடுவித்து காணி இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்கி மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆகவே இங்குள்ள மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளோம்.. அதற்கமைய அவர்களை விரைவில் குடியேற்றவுள்ளொம். ஏனெனில் விரரவாக குடியேற்றுமாறு ஐனாதிபதி கூறியிரப்பதன் பிரகாரம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
Post a Comment