தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் தைப்பொங்கலுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் இந்த அரசில் நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படுமென சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் யாழ் நகரில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற கலாச்சார நிலையத்தை இன்று பார்வையிட்டார்.
இதன் போது தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நூட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்ற தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான போராட்டங்களை கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்து வந்தனர்.
இதனையடுத்த சில உறுதிமொழிகளையும் கடந்த அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால் அவை எதவும் நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ச்சியாக மக்கள் ஆயிரம் ரூபா சம்பவளத்தை வலியுறுத்திக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஐனாதிபதி தேர்தலின் போது ஐனாதிபதி வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அந்த மக்களின் பிரதிநிதிகளும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பல்வேறு வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் புதிய ஐனாதிபதியாக கோத்தபாய ராஐபக்ச தெரிவு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் ஆயிரம் ரூபா கெர்டுப்பனவு இன்னமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு நிலையிலையே இந்த விடயம் சம்மந்தமாக அமைச்சரிடம் கேட்டதற்கு பதிலளிக்கையில்..
கடந்த ஐனாதிபதி தேர்தல் கால பிரச்சாரத்தின் போது இன்றைய ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆகவே அதில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. ஏனெனில் தான் சொன்னதை ஐனாதிபதி நிச்சயமாக செய்வார்.
ஆகையினால் எதிர்வரும் தைப் பொங்கல் நேரத்தில் ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். இது இந்த இடைக்கால அரசாங்கத்திலேயே பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் உறுதிளயித்துள்ளார் அமைச்சர் தொண்டமான்.
.......................................................
Post a Comment