தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாக இருந்த சட்டத்தரணி என் சிறிகாந்தா அக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்தக் கட்சி தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் சிறிகாந்தா அக் கட்சிக்கான பெயர் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதற்கான தனது புதிய கட்சியில் இணைந்து கொள்பவர்களிடத்தே கட்சிக்கான புதிய பெயர் இருந்தால் அது தொடர்பில் இரண்டு பெயர்களை தனக்கு வழங்குமாறு ஆலோசனை கேட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதனையடுத்து சிறிக்காந்தாவின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து கொள்ளவுள்ள பலரும் கட்சிக்கான பெயர்கள் சிலவற்றை சிபார்சு செய்தள்ளனர். ஆயினும் இன்னும் பலரும் கட்சிக்கான பெயரை சிபார்சு செய்ய வேண்டியிருப்பதால் இன்னும் சில நாட்களில் அந்தக் கட்சிக்கான இறுதிப் பெயர் தொடர்பில் தீர்மானிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆக எது எப்படியாயினும் சிறகாந்தா புதிய கட்சியொன்றை ஆரம்பித்து தமிழரசுக் கட்சி சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளப் போவதில்லை. ஆகையினால் முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியில் அவருடைய கட்சியும் இணைந்து கொள்ளப் போவதாகவும் சிறக்காந்தா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment