கூட்டமைப்பின் பங்காளிகள் ஒருமித்து செயற்பட முடிவு, மக்களும் ஒருமித்து முடிவெடுக்க வேண்டும் - சம்மந்தன் வலியுறுத்து - Yarl Voice கூட்டமைப்பின் பங்காளிகள் ஒருமித்து செயற்பட முடிவு, மக்களும் ஒருமித்து முடிவெடுக்க வேண்டும் - சம்மந்தன் வலியுறுத்து - Yarl Voice

கூட்டமைப்பின் பங்காளிகள் ஒருமித்து செயற்பட முடிவு, மக்களும் ஒருமித்து முடிவெடுக்க வேண்டும் - சம்மந்தன் வலியுறுத்து


ஏதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுவதாக பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி பிளவுபடாமல் செயற்பட வேண்டுமென்றும் அவ்விதமான ஒற்றுமையே இன்றைய காலத்தில் அவசியம் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்த கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பின் பெயரில் செயற்படுகின்ற மூன்று கட்சிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட்டின் தலைவர்களும் ஏனைய உறுப்பினர்களும் எங்களிடம் பாராளுமன்றத் தேர்தல் சம்மந்தமாக இன்று கூடிப் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.

மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. ஒருமித்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலதிகமான கருமங்கள் என்ன விதமாக கையாளப்பட வேண்டுமென்பது பற்றியும் பேசப்பட்டது.

அவ்விதமாக உறுப்பினர்கள் தங்களுடைய கருத்தக்களைச் சொன்னார்கள்.
அந்தக் கருத்தக்கள் பரிசீலிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் மீண்டும் கூடி ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேர்தலை எதிர்நோக்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி தமிழ் மக்கள் பிளவுபடாமல் ஒன்றாகக் கூடி தங்களது பலத்தை இந்தத் தேர்தல் மூலமாக வெளிக்கொணர வேண்டுமென்பதே எங்களது கருத்து. இன்றைய காலகட்டத்தில் அவ்விதமான ஒற்றுமை அத்தியாவசியம்.

ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கும். ஏனைய கருமங்களைக் கையாள்வதற்கும் தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் பின்னாள் அவர்களுக்காக நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த, அவர்களுக்காக செயற்படக் கூடிய ஒரேயொரு கட்சியின் பின்னாள் அவர்களுடைய கருமங்களைக் கையாள்வதன் மூலமாக போதிய அனுபவத்தைப் பெற்று இந்தக் கருமங்களைக் கையாளக் கூடிய கட்சியின் பின்னாள் நிற்க வேண்டியது அத்தியாவசியம் என்று எமது உறுப்பினர்கள் கூறினார்கள்.

அது தான் தமிழ் மக்களுடைய கருத்து என்பதிலும் ஐயம் இருக்க முடியாது. ஆனபடியால் நாங்கள் மீண்டும் விரைவில் கூட ஏனைய கருமங்கள் சம்மந்தமாக முடிவு எடுக்கப்பட்ட பிறகு அந்த முடிவுகள் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post