எவருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் - ட்ரம்ப் அதிரடி - Yarl Voice எவருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் - ட்ரம்ப் அதிரடி - Yarl Voice

எவருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் - ட்ரம்ப் அதிரடி


பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கும் நிலையில் எந்தப் பிரதமருடனும் இணைந்து பணியாற்ற முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனுக்கு வருகை தந்த அவர் பிரித்தானியத் தேர்தலில் இருந்து விலகி இருப்பேன் என்றும் பிரெக்ஸிற்றினை தான் விரும்புவதாகவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மிகவும் திறமையானவர் என்று கருதுவதாகவும் கூறினார்.

டிசெம்பர் 12 ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்து எதனையும் கூறி அதனைச் சிக்கலுக்குள்ளாக்க விரும்பவில்லை என்று  குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரின் இல்லத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க்குடனான காலை உணவுச் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

உலகின் மிகப்பெரிய ராணுவக் கூட்டணியான நேட்டோவின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை புதன்கிழமை வற்ஃபேர்ட்டில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி நேற்றையதினம் பிரித்தானியா வந்தடைந்தார்.

பக்கிங்ஹம் அரண்மனையில் ராணி ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியிலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ளவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post