பிரிட்டன் தேர்தலில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கென்சர்வேட்டிவ் கட்சி பெரிய வெற்றி
பிரிட்டன் தேர்தலில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கென்சர்வேட்டிவ் கட்சி பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்டிற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்துஇ வேல்ஸ்இ ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணும் பணி துவங்கியது. இதில் துவக்க நிலையில்இ கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால்இ சிறிது நேரத்திலேயே நிலமை மாறிஇ கென்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
பொரிஸ் ஜோன்சனின் கென்சர்வேட்டிவ் கட்சி 362 இடங்களிலும் தொழிலாளர் கட்சி 199 இடங்களிலும் வென்றுள்ளது. 1935ம் ஆண்டின் பின்னர் அந்த கட்சி சந்தித்த மோசமான பெறுபேறு இதுவாகும். இந்த தோல்விக்கான பொறுப்பை எற்று பதவிவிலகுவதாக கட்சி தலைவர் கோர்பன் அறிவித்துள்ளார்.
Post a Comment