அரசியலில் ஆட்டமிழக்கும் ரணிலுக்கு புதிய பதவியொன்றை வழங்க யோசனை
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய பதவி ஒன்றை வழங்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அதனடிப்படையில் அவரை கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கும்படி பின்வரிசை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து மிகவிரைவில் கட்சியின் நாடாளுமன்றத் குழுக்கூட்டத்தின் போது கலந்தாலோசிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவிடம் கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்டஅனைத்து பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றார்கள்.
தேவையாக இருப்பின் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியை வழங்கலாம் எனவும்இ அதன் மூலம் அவர் தொடர்ந்தும் கட்சிக்கு நன்மைகளை செய்யலாம் எனவும் ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு முன்னாள் பிரதமர் பாடுபடுகிறார் என்பது உண்மையாக இருந்தால் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி தகுந்த முடிவை விரைவில் அறிவிப்பார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Post a Comment