கணவன் மனைவி சண்டையில் தீயில் எரிந்த மனைவி உயிரிழப்பு - Yarl Voice கணவன் மனைவி சண்டையில் தீயில் எரிந்த மனைவி உயிரிழப்பு - Yarl Voice

கணவன் மனைவி சண்டையில் தீயில் எரிந்த மனைவி உயிரிழப்பு


கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிய இளம் மனைவி தீயில் எரிந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

 இந்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு சேர்ந்த கசீபன்கீர்த்தனா(வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

அச்சுவேலி தெற்கில் வசித்துவரும் குறித்த  குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி கணவனுக்கு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மனைவியின் உடலில் தீப்பற்றி எரிந்தது தீக்காயத்துக்கு உள்ளான பெண்ணை உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று அதிகாலை உயிரிழந்தார் இந்த உயிரிழப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post