மகிந்தவின் இளைய புதல்வர் யாழ் விஐயம்,
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச யாழ். குடாநாட்டிற்கு இன்றைய தினம் விசேட விஜயமொன்றை செய்துள்ளார்.
இதன்போது அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்பின்னர் யாழில் சுவரோவியங்கள் வரையப்பட்டு வரும் இடத்திற்கு சென்று குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Post a Comment