சீனாவிற்கு உதவ வேண்டாமென உலக வங்கியை எச்சரித்த அமெரிக்கா - Yarl Voice சீனாவிற்கு உதவ வேண்டாமென உலக வங்கியை எச்சரித்த அமெரிக்கா - Yarl Voice

சீனாவிற்கு உதவ வேண்டாமென உலக வங்கியை எச்சரித்த அமெரிக்கா


சீனாவுக்கு கடன் வழங்கியுள்ள உலக வங்கிக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமெரிக்கா சீனாவுக்கு கடன் வழங்க வேண்டாமெனவும் உலக வங்கியை எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு கடன் வழங்குவதை உலக வங்கி நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள டிரம்ப் 'உலக வங்கி சீனாவுக்கு ஏன் கடன் வழங்க வேண்டும்? அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது.

அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் தரவேண்டும்? கடன் வழங்குவதை நிறுத்துங்கள்.'  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post