புதிய அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனத்தை வழங்க வேண்டும் - ஐனாதிபதியை சந்திக்கவும் தீர்மானம் - Yarl Voice புதிய அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனத்தை வழங்க வேண்டும் - ஐனாதிபதியை சந்திக்கவும் தீர்மானம் - Yarl Voice

புதிய அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனத்தை வழங்க வேண்டும் - ஐனாதிபதியை சந்திக்கவும் தீர்மானம்


வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ் ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்று கூடலில்  வடக்காணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதறகுரிய நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்திருக்கிற புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக கடந்த அரசாங்கம் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறினாலும் குறிப்பிட்ட அளவிலானோருக்கே வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. அதனால் இன்னும் பெருமளவிலானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆகவே அனைவருக்கும் பாகுபாடுகளின்றி வேலை வாய்ப்பை விரைந்து வழங்க வேண்டும். இதற்கமைய புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொளகிறோம் என்றனர்.

மேலும் வேலை வாய்ப்பை வழங்க வலியுறுத்தி ஐனாதிபதிக்கும் மகஜரொன்றும் கையளித்பதென இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post