நாங்கள் பிரிவினைவாதிகளோ இனவாதிகளோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் மனமாற்றம் ஏற்பட வேண்டியது மிக மிக அவசியமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீகே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
புதிய ஐனாதிதி புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அல்லது முன்னெடுக்க வெண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கைளில்..
உண்மையாக நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அடிப்படையில் நாங்கள் இனவாதிகளும் அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு சிங்களவருக்கு தானே நாங்கள் ஐனாதிபதி தேர்தலில் வாக்களித்திருக்கிறோம்.
அவர்களுக்கிடையில் அது கட்சி வேறுபாடு இருக்கட்டும். ஆனால் சிங்கள பௌத்தருக்கு தான் வாக்களித்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து நாங்கள் நாட்டைப் பிரிப்போம் என்று நினைக்கிற அந்த எண்ணக்; கருவில் இருந்து சிங்கள தேசமும் அரசாங்கமும் விலக வேண்டும்.
நாங்கள் எங்கள் தாயகத்தில் வடக்கு கிழக்கு இணைத்து எங்களுக்குரிய தன்னாட்சி நிர்வாகத்திற்கான எங்களுடைய கலைஇ கலாச்சாரங்களைப் பேணிக் கொண்டு இந்த நாட்டு பிரiஐகளாக ஒன்றாக இருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவது இந்த அரசாங்கத்தின் கடமை.
அதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதை அரசாங்கம் செய்யலாம். அவ்வாறு செய்ய முடியாது என்றில்லை. ஏனென்றால் நாங்கள் முழுமையாக இந்த நாட்டுப் பிரiஐ நாங்கள் இலங்கையர்கள் என்றால் எங்களுக்கு சம உரிமை வேண்டும். நாங்களும் சம உரமையோடும் தனித்துவத்தோடும் வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்ப சிங்கள தேசம் தங்களுடைய அடையாளத்தை எல்லாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அப்படி எல்லாம் எதிர்பார்க்கின்ற சிங்கள தேசத்தவர்கள் தமிழர்களும் அவ்வாறு சிந்திப்பதை ஏன் பிழையாக எடுக்க வேண்டும்.
சிங்கள தேசம் இது எங்கள் நாடு எங்கள் ஆட்சி எங்கள் அரசாங்கம் நாங்கள் தான் ஆட்சி என்று நினைக்கின்றது போல நாங்களும் எங்கள் பகுதியில் இந்த நாட்டுக்குள்ளே எங்கள் கலாசாரத்தை மொழியை நிலத்தை பாதுகாத்துக் கொண்டு கௌரவமாக தனித்துவமாக வாழ எதிர்பார்ப்பதை குiறாயக எடுக்க முடியாதே.
அப்படியான மனோ பக்குவம் மாறுதல் வந்தால் நிச்சயமாக இந்த அரசாங்கம் செய்யலாம். மனமாற்றம் தான் அடிப்படைத் தேவை. அது இருந்தால் இந்த நாட்டிற்கும் நாட்டிலுள்ளவர்களுக்கும் சுபீட்சமான எதிர்காலம் உண்டு.
Post a Comment