யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
யாழ்.மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டநிலையில் தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிட இருவரை தவிர மேற்பட்டோர் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார் வைரஸ் மற்றும் டெங்கு நோய் தாக்கம் உள்ள நிலையில் நோய்த்தொற்று ஏற்படக் கூடிய சூழ்நிலை காணப்படுவதனால் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட அதிகமானவர்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுகொண்டுள்ளார்
கடந்த நவம்பர் மாதம்1549 பேர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 264 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றனர். இதனுடன் ஒப்பிடுகையில் இந்தவருடம் பல மடங்காக டெங்கின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக யாழ்நகரப்பகுதி நல்லூர் சண்டிலிப்பாய்கோப்பாய் பகுதிகளில் இருந்தே அதிகளவில் டெங்கின் தாக்கத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெறுகின்றனர். தற்போதும் விடுதிகளில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் தொடக்கம் டெங்கு நோயாளிகளின் அனுமதி குறைவடைந்து காணப்படுகிறது. தினசரி 110 இற்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.தற்போது அது குறைவடைந்துள்ளது. நேற்றைய புள்ளிவபரத்தின்படி 30 பேரே டெங்கு நோயால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயால் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment