கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதல்ல, மாற்றுத் தலைமை யார் என அடிபடுபவர்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் - சுமந்திரன் - Yarl Voice கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதல்ல, மாற்றுத் தலைமை யார் என அடிபடுபவர்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் - சுமந்திரன் - Yarl Voice

கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதல்ல, மாற்றுத் தலைமை யார் என அடிபடுபவர்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் - சுமந்திரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதல்ல எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின்; பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இந்தப் பிளவுகளால் மாற்றுத் தலைமை யார் என்று இன்றைக்கு பலரும் தங்களுக்குள் அடிபட்டு ஒரு முடிவிற்கு வரட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் நகரிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை சுமந்திரன் நடாத்தியிருந்தார். இதன் போது கூட்டமைப்பிற்குள் ஏற்படுகின்ற பிளவுகள் மற்றும் மாற்றுத் தலைமை குறித்தும் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பிற்குள் பிளவுகள் வருவது விரும்பத்தக்கதல்ல. ரெலோ இரண்டாகப் பிரிந்தது என்று நான் நினைக்கிவ்லலை. ரெலோவில் இருந்து இரண்டு பேர் பிரிந்திருக்கிறார்கள். ஆனபடியால் ரெலோ இரண்டாக பிரிந்தது என்கிற கருத்து இல்லை. 

அதே நேரத்தில் பிரிந்தவர்களுக்கு பிரிந்து போவதற்கான கருத்தும் இருக்கிறது. ஏன் பிரிந்து போகின்றார்கள் என்று கேள்வியைக் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியாது. ஆகையினாலே அந்த சுயாதீனத்தை உபயோகித்து அவர்கள் பிரிந்த செல்கின்ற குறித்து அவர்களுக்கு நாங்கள் அறிவுரை சொல்லத் தேவையில்லை. 

ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் தேவையற்ற விடயங்கள் எல்லாத்தையும் எடுத்து ஒவ்வொருவரும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆக நாங்கள் விடுத்த அழைப்பிற்கு; ஒற்றுமையாக வர எங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்hல் அதுவே போதும். அதை விடுத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவரும் வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்த மாற்றுத் தலை என்ற விடயம் குறித்து இன்றைக்கும் நான் பார்த்த போது மாற்றுத் தலைமைக்கான தலைமைத்தவம் தான் என்று ஆனந்தசங்கரி சொல்லியிருக்கின்றார். ஆகவே மாற்றுத் தலைமைக்கான போட்டி அடிபிடி அவர்களிடத்தே முடிவடைய வேண்டும். 

இன்றைக்கு அவர்களிடத்தே 8, 10 கட்சிகள் இருக்கிறது. அவர்கள் எல்லாருமே மாற்றுத் தலைமை என்று அடிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் அடிபட்டு யார் மாற்றுத் தலைமை என்று முடிக்கட்டும். அதன் பின்பு யார் மாற்றுத் தலைமை என்பதைப் பற்றி நாங்கள் பேசலாம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post