சிறிகாந்தா சொல்வது உண்மைக்கு புறம்பானது. அவர்களது வெளியேற்றம் கட்சிக்கு பாதிப்பில்லை, மாற்று அணியை மக்களே தீரமானிக்க வேண்டும் - விந்தன் - Yarl Voice சிறிகாந்தா சொல்வது உண்மைக்கு புறம்பானது. அவர்களது வெளியேற்றம் கட்சிக்கு பாதிப்பில்லை, மாற்று அணியை மக்களே தீரமானிக்க வேண்டும் - விந்தன் - Yarl Voice

சிறிகாந்தா சொல்வது உண்மைக்கு புறம்பானது. அவர்களது வெளியேற்றம் கட்சிக்கு பாதிப்பில்லை, மாற்று அணியை மக்களே தீரமானிக்க வேண்டும் - விந்தன்


தமிழ் மக்கள் போராட வேண்டியது தென்னிலங்கை சக்திகளுடன் ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமக்குள்ளேயே மோதிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் தென்னிங்கை ஒன்றுபட்டுள்ளது. சிங்களவர்களிடமிருந்து தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்பவர்கள் தாமே மாற்று அணியென கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களிற்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவை பெற்றாலேயே அவர்களை மாற்று அணியென குறிப்பிட முடியும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த சில நாட்களாக ரெலோவின் யாழ் மாவட்டத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இது யாழ் மாவட்டத்திலுள்ள ஒரு பிரிவினரால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குழப்பங்கள்.

திருகோணமலையில் கடந்த யூன் 1ம் திகதி கட்சியின் பொதுக்குழு கூடியது. கட்சியின் அதிகாரம்மிக்க குழுவான பொதுக்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமைக்குழு முடிவெடுக்க அனுமதியளித்திருந்தது.

வவுனியாவில் நவம்பர் 6ம் திகதி தலைமைக்குழு கூடியது. இதில் 15 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். மக்களின் கருத்தோடும் விருப்பத்தோடும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டுமென 11 உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு 2 நாட்கள் முன்னதாக தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக தமது முடிவை அறிவித்தனர். பின்னர் புளொட்டும் அறிக்கை மூலம் நிலைப்பாட்டைஅறிவித்தனர். பங்காளிக்கட்சிகள் இரண்டும் அந்த முடிவை எடுத்தார்கள் என நாம் அந்த முடிவை எடுக்கவில்லை. மக்களின் விருப்பங்கள்இ கருத்துக்களை அறிந்து அந்த முடிவை எடுத்தோம்.

தலைமைக்குழுவின் 15 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் அதை ஆதரித்தார்கள். ரெலோவிலிருந்து வெளியேறியுள்ள சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் இன்னும் ஒரு சிலரும் எதிர்த்தார்கள். நடுநிலை வகிக்க வேண்டுமென குறிப்பிட்டனர். எனினும் கட்சியின் பெரும்பான்மை முடிவை ஏற்பதாக தெரிவித்தார்.

பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுத்த கட்சியின் முடிவை அறிவிக்கும்படி சிறிகாந்தா சொன்னார். கட்சியின் செயலாளர் நாயகமான அவரை அறிவிக்கும்படி கூறப்பட்டபோதும்இ அவர் மறுத்து விட்டார். பின்னர் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அந்த முடிவை அறிவித்தார்.

பின்னர் 9ம் திகதி கட்சியின் யாழ்மாவட்டக் கிளையை சிறிகாந்தா கூட்டினார். ஆனால் நான் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கட்சியின் கூட்டம் என்ற அடிப்படையில் அறிவிப்பில்லாமல் சென்றோம். கூட்டத்தில் 33 பேர் இருந்தனர். நான் ரெலோவில் சார்பில் 31 வருடங்களாக யாழ் மாவட்டத்தில் தொடர்ந்து செயற்பட்டு வருகிறேன்.

ஆனால் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட 10 பேர் வரையானவர்களை நான் கட்சிக்குள் கண்டிருக்கவில்லை. கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களை இணைத்திருப்பதாகவும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டாததையும் சுட்டிக்காட்டினேன். கூட்டத்திற்கு வந்தவர்கள் கட்சிக்குள் இணைந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் உள்ளிட்ட சிலர் ரெலோவின் தலைமைக்குழு எடுத்த முடிவு தவறானது சஜித்தை ஆதரிக்க முடியாதென தலைமைக்குழு மீது வசைபாடினர். நான் தலைமைக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் விளக்கமளித்தேன். கட்சியின் உயர்பீடமான பொதுக்குழுவின் அங்கீகாரத்துடனேயே தலைமைக்குழு தீர்மானம் எடுத்ததை சுட்டிக்காட்டினேன்.

கட்சியின் செயலாளரும் பகிரங்கமாக கட்சியையும் முடிவையும் விமர்சித்தார். ரெலோவினால் இடைநிறுத்தப்பட்ட சிலாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டுமென்றார். கட்சி செயலாளர் பொறுப்பாக கட்சியின் முடிவை அங்கீகரித்து நடந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் தீர்ப்பு என்னவென்பது அனைவருக்கும் தெரியும்.

தேர்தலின் பின் திருகோணமலையில் கூடிய ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில்இ கட்சிக்கு எதிரானவர்கள் இடைநிறுத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணத்தி் செய்தியாளர் வந்திப்பை நடத்தி ரெலோவிலிருந்த வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின் யாழ் மாவட்ட அணியில் 80 வீதமானவர்கள் தம்முடன் இணைந்திருப்பதாகவும் ஒரு சிலரே தமது முடிவை ஏற்கவில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் கட்சியின் யாழ் மாவட்ட கிளையில் 90 வீதமானவர்கள் ரெலோவுடன்தான் உள்ளனர். மக்களிற்கும் நாட்டிற்கும் சேவை செய்யவே வந்தோம்இ கட்சிகளை உடைக்கவோஇ பிரிக்கவோ வரவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சில உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்தான் குழப்ப அணியுடன் இருக்கிறார்கள். அவர்கள் ரெலோவுடனும் இருக்கிறார்கள். அந்தப்பக்கத்திலும் உள்ளனர். இரண்டு தோணியில் கால் வைத்துள்ள அவர்கள் பற்றி கவனித்து வருகிறோம்.

செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக்கட்சியுடன் அதிருப்தியில் இருப்பதாகவும்இ வெளியேற வேண்டுமென பேசியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். கடச்த 4ம் திகதி தமிழரசு கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்தது பற்றிஇ 6ம் திகதி நடந்த தலைமைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தன்னிச்சையான முடிவை எல்லொரும் கண்டித்தார்கள். ஆனால் அந்த விடயம் வேறு.

கூட்டமைப்பிற்குள் தமிழரசு கட்சியுடன் பயணிப்பதா வெளியேறுவதா என்பது வேறு விடயம். ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்பது வேறு. சஜித்தை ஆதரிக்காததுடன் கூட்டமைப்பிற்குள்ளிருந்து ரெலோ வெளியேற வேண்டுமென்பதே இவர்களின் நிலைப்பாடு. ஒரு சிலர் தாம் நினைப்பதை செய்வதை மற்றவர்களும் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது அதை நாங்கள் செய்யவில்லையென்றதும் தனித்து செயற்படுவது ஜனநாயக விரோதம். ஏனையவர்களின் கருத்தை மதிக்காமல் தாம் சொல்வதே சரியானதென வாதிடுவது ஏற்க முடியாதது.

தமிழ் அரசுக்கட்சியுடன் பயணிப்பதா இல்லையா என்பதை ரெலோ தீர்மானிப்போம். அதைத்தான் செல்வம் அடைக்கலநாதன் அன்று தெளிவாக பேசியிருந்தார். ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது தன்னிச்சையான முடிவுகளை ஏற்க முடியாது என்றுதான் குறிப்பிட்டார்.

எம்மிடமிருந்து விலகிச் சென்றவர்களை ஈ.பி.டி.பி புலனாய்வாளர்கள் மஹிந்த ராஜபக்சவினரால் சிறிரெலோ உருவாக்கப்பட்டது. அதில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யாருமில்லை.

2010 இல் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் ஆகியோர் ரெலோவிலிருந்து விலகிச் சென்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனாதிபதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்கள். அதில் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. பின்னர் எம்முடன் வந்து இணைந்தார்கள்.

இப்பொழுதுஇ தமிழரசுக்கட்சியுடனான கூட்டணியை முறிக்க வேண்டுமென குறிப்பிட்டு மீண்டும் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் முன்னர் பிரிந்து சென்ற போதும் ரெலோவிற்கு பாதிப்பிருக்கவில்லை. இனியும் இருக்காது.

நாம்தான் மாற்று அணியென இவர்கள் சொல்ல இன்னொரு அணி தாமே மாற்று அணியென்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் பிரிந்து சென்றது.  பின்னர் தமிழரசுக்கட்சியிலிருந்தும் கூட்டமைப்பிலிருந்தும் சிலர் வெளியேறினர். அவர்கள் எல்லோரும் ஒவ்வொரு திசையில் நின்று தாம்தான் மாற்று அணியென்கிறார்கள்.

உண்மையான மாற்று அணி யாரென்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கு இவர்கள் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். 2010இலிருந்து மக்களிடம் செல்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் மாகாணசபையிலோஇ உள்ளூராட்சி மன்றங்களிலோ ஆட்சியை தீர்மானிக்க கூடியவர்களாக இல்லை. தொடர்ந்து தேர்தலிற்கு செல்கிறார்கள். மக்கள் அங்கீகாரம் கிடைத்தாலே மாற்று அணியாக கருத முடியும். மாற்று அணியென தம்மைத்தாமே கூறிக்கொள்கிறார்கள்.

தென்னிலங்கையில் சிங்கள மக்களாக ஒன்றிணைந்து வாக்களித்துள்ளனர். இதிலிருந்து நாம் பாடத் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இனம் மதத்தின் பெயரால் ஒன்றுபட்டுள்ளனர். தமிழ் தேசித்தின் பெயரில் பயணிக்கும் நாம் பிரிந்துஇ பிளவுபட்டு நிற்கிறோம். இது இந்த மண்ணை மக்களை பாதிக்கப் போகிறது. எனவே தென்னிலங்கையிலருந்து அவர்கள் பாடம் படிக்க வேண்டும்.

தமிழ் தேசிய சக்திகள் ஒன்றிணைந்த செயற்பட வேண்டிய காலமிது. தென்னிலங்கை சக்திகளுடன்தான் நாம் போராட வேண்டும். ஆனால் நாம் தமிழ் தேசிய சக்திகளிற்கிடையில்தான் மோதிக் கொண்டிருக்கிறோம். அனைத்து தமிழ் தேசிய சக்திகளும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post