ஐனாதிபதி கோத்தபாயவை கொல்லச் சதி - சந்தேகநபர்கள் தடுத்து வைப்பு - Yarl Voice ஐனாதிபதி கோத்தபாயவை கொல்லச் சதி - சந்தேகநபர்கள் தடுத்து வைப்பு - Yarl Voice

ஐனாதிபதி கோத்தபாயவை கொல்லச் சதி - சந்தேகநபர்கள் தடுத்து வைப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யத் திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரை 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று மினுவாங்கொடை நீதவான் கேசர சீ.ஏ. சமரதிவாகர அனுமதியளித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஓட்டமாவடி நீராவோடை ஆலிம்பாதை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் 3 பேருடன் கட்டுநாயக்க அமந்தொலுவ ஜயவர்தனபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஏனைய சந்தேகத்துக்குரியவர்கள் ஏதேனும் குற்றம் ஒன்றை இழைக்கத் தயாரில்லை என்ற விடயம் உறுதியானதை அடுத்து அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளைஇ 27 வயதான சந்தேகத்துக்குரியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப உறுப்பினரை கொலை செயற்வதற்காக திட்டமொன்றை தீட்டியிருந்தாக தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும இதன் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ்இ அவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும் பொலிஸாரால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமையஇ விடயங்களை ஆராய்ந்த நீதவான் அதற்கு அனுமதி வழங்கியதுடன் விசாரணை நிறைவடைந்தவுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post