அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சஜித் பிரேமதாச
அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு சுயாதீன நீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார ரீதியில் அதிகாரத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் பின்னர் அரசியல் பழிவாங்கள் மீண்டும் தலைதூங்கியுள்ளன என்றும் இதனை ஜனநாயக ரீதியில் நிறைவுக்கு கொண்டு வருவது அவசியமாகும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
கடந்த வருடம் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் ஒற்றுமையுடன் ஒன்றினைந்து ஜனநாயகத்திற்காக போராடியத்தை சுட்டிக்காட்டிய அவர் தற்போது மீண்டும் ஜனநாயகத்தின் இருப்பு குறித்து சவால் எழுந்துள்ளது என கூறினார்.
ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கு எழுகின்ற அமைதிவழி போராட்டத்தை ஒன்றுப்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Post a Comment