ஆனந்தசங்கரிக்கு என் மீது கோபம், வரலாறு தெரியாவதர் சங்கரி, அவருடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை - சுமந்திரன் எம்பி - Yarl Voice ஆனந்தசங்கரிக்கு என் மீது கோபம், வரலாறு தெரியாவதர் சங்கரி, அவருடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை - சுமந்திரன் எம்பி - Yarl Voice

ஆனந்தசங்கரிக்கு என் மீது கோபம், வரலாறு தெரியாவதர் சங்கரி, அவருடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை - சுமந்திரன் எம்பி


வரலாற்றைத் தவறாக ஆனந்தசங்கரி ஐயா சொன்ன போது அதனை நான் திருத்தியதால் அவருக்கு என் மீது கோபம் இருக்கிறது. அவர் வயது முதிர்ந்தவர் அவருக்கு ஞாபக மறதி ஏற்படுவதெல்லாம் சகஐம். ஆனபடியால் அவருடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்தினர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழிலுள்ள தனது அலுவலகத்தில் சுமந்திரன் ஊடக சந்திப்பொன்றை இன்று நடாத்தியிருந்தார். இதன் போது சுமந்திரனுக்கு வரலாறு தெரியாது என ஆனந்தசங்கரி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது விடயம் சம்மந்தமாக மேலும் தெரிவிக்கையில்..

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக கடந்த 2003 ஆம் ஆண்டு வைத்த வழக்கில் அவர் சாட்சியாக சாட்சியம் கொடுத்த போது அவரை நான் குறுக்கு விசாரணை செய்திருந்தேன். அதன் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரகள்; யார் என்று ஆரம்பத்தில் நான் கேட்டிருந்தேன்.

அதற்கு அவர் இரண்டு பேர் என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன வரலாற்றுத் தவறை திருத்தி அவருக்கு ஞாபகப்படுத்தி மூன்று தலைவர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். அவ்வாறு அவர் சொன்ன வரலாற்றுத் தவறை நான் திருத்தியது பதிவில் இருக்கிறது. அந்தக் போகம் அவருக்கு இருக்கிறது.

அது இன்னும் விட்டுப் போகதது தான் சுமந்திரன் வரலாறு தெரியாதவர் என்று அவர் சொல்வதற்கு காரணம். அவர் என்னுடைய பேரன் முறையானவர். மிகவும் வயது முதிர்ந்தவர். அவருடன் மல்லுக் கட்டுவதற்கு நான் விரும்பவில்லை. அவருக்கு ஞாபக மறதி ஏற்படுவதெல்லாம் சகஐம்.

தவறான வரலாற்றை சொல்லியதை ஞாபகப்படுத்தி அவரைத் திருத்தியது அவரக்கு இன்னமும் கஸ்ரமாக இருக்கிறது. அதாவது தான் தவறாகச் சொல்லிவிட்டேன் நான் அவரைத் திருத்திவிட்டேன் என்பது அவருக்கு கஸ்ரமாக உள்ளது. அதனால் அவர் எனக்கு வரலாறு தெரியாது என்றிகறார். ஆனாலும் அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post