கேமி குழு தலைவனின் சகோதரன் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறை கும்பல்களில் ஒன்றான 'கேமி' எனும் குழுத் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஜித் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு இன்று (04) வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞனை ஓட்டோவொன்றில் ஏற்றி வந்த இனந்தெரியாத நபர்கள்இ ஓட்டோவுக்குள் வைத்து அவரை சரமாரியாக வாளால் வெட்டி கல்வியங்காடு பிள்ளையார் கோயில் பகுதியில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்துஇ ஸ்தலத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை மீட்டு யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கஞ்சா வியாபாரம் தொடர்பில் நாயன்மார் கட்டுப் பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றுக்கும் கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றும் இடையில் இடம்பெற்றுவந்த குழு மோதலின் தொடராகவேஇ இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனஇ பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment