ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் -மோடியிடம் எடப்பாடி வலியுறுத்து - Yarl Voice ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் -மோடியிடம் எடப்பாடி வலியுறுத்து - Yarl Voice

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் -மோடியிடம் எடப்பாடி வலியுறுத்து


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற
முதலமைச்சருக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அளித்த மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிஇ தமிழகத்தில் சட்டம்இ ஒழங்கும் முறையாக பேணப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தினால் எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post