பிணையில் வெளியே வந்தார் சம்பிக்க, விளக்கமறியலில் உள்ளே போனார் சாரதி - Yarl Voice பிணையில் வெளியே வந்தார் சம்பிக்க, விளக்கமறியலில் உள்ளே போனார் சாரதி - Yarl Voice

பிணையில் வெளியே வந்தார் சம்பிக்க, விளக்கமறியலில் உள்ளே போனார் சாரதி


கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார். இதன்படி 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்

இதேவேளைஇ இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரின் சாரதி இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலையாகிய குறித்த சாரதியை எதிர்வரும் 06ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் வாகன சாரதியாக கடமையாற்றிய துஷித குமார என்பவரே இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் முன்னிலையானதை தொடர்ந்தே முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவகவுக்கு பிணை வழங்கப்பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post