கண்டுகொள்ளதாக கட்சி உறுப்பினர்கள், கடும் ஏமாற்றத்தில் முன்னாள் ஐனாதிபதி
கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவு விருந்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பொலநறுவை அரலிய ஹேட்டலில் இடம்பெற்ற இந்த உணவு விருந்தில் மைத்திரிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மாத்திரம் கலந்து கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிக்கான அன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மாத்திரம் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளைஇ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான எந்தவொரு உறுப்பினரும் மைத்திரியின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாட்டில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.
நீண்ட விடுமுறை ஒன்மை கழிப்பதாக அவர் பிரித்தானியா நோக்கி செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில் குறித்த விடுமுறை காலப்பகுதியில் தீர்மானிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Post a Comment